அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தமிழ் வாக்கெடுப்புப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு கனடா பிரதமரை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2354 நாள் இன்று. வவுனியா நீதி மன்றல் முன் எ-9 வீதியில் இப் பந்தலில் இப்போராடடத்தில் பயணிக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு கனேடிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அந்தக் கடிதத்தில் சில முக்கியமான விஷயங்களை இன்று இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழர்களுக்கு உண்மையில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரதமர் ட்ரூடோவின் அவதானிப்புக்காகவும், அவர் கூறிய அறிக்கைக்காகவும் நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கனேடிய தமிழ் எம்.பி.யை தனது அமைச்சரவையில் பயன்படுத்தியதற்காக அவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்கள் புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான மக்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் அடிமைப் பொருளாதாரத்தில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கான உரிமம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மட்டுப்படுத்தி அல்லது தடை செய்வதன் மூலம் நாம் என்ன மாதிரியான வேலை செய்யா வேண்டும் என்பதை சிங்களவர்களே முடிவு செய்வார்கள்.

எனவே இலங்கையின் வடகிழக்கில் தமிழர் இறையாண்மை கொண்ட தாயகம் எமக்கு வேண்டும். இதற்காக தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை ஐநா நாடாத்தி அவதானிக்க வேண்டும்.

கனடா கியூபெக் மாகாணத்தை, ஒரு இறையாண்மை கொண்ட பிரெஞ்சு நாடாக முடிவெடுப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த அனுமதித்ததால், பிரதமர் ட்ரூடோ உலகில் எங்களுக்காக பொது வாக்கெடுப்புக்கு வாதிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இலங்கைக்கு வெளியே முதலில் , இலங்கையின் வடகிழக்கில் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.

பொது வாக்கெடுப்புக்கு செல்வி ஜெயலலிதா அழைப்பு விடுத்ததை அடுத்து, அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிண்டன், செல்வி ஜெயலலிதாவை சந்தித்தது மிகவும் கவனிக்கத்தக்கது.

மேற்குலகத் தலைவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் முதல் தலைவராக பிரதமர் ட்ரூடோ இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

முழுத் தமிழர் தாயகமும் சிங்கள ஆக்கிரமிப்பின் மூலம், சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர், பிரதமர் ட்ரூடோ தாமதமின்றி விரைவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார் என நம்புகிறோம்.

எனவே, ஒவ்வொரு தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்குமாறும், தமிழ் வாக்கெடுப்புக்கு அழைப்புக்கு, மற்ற சக்தி வாய்ந்த நாடுகளிடம் உதவிகள் கேட்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி செயலாளர்
கோ.ராஜ்குமார் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.
ஆவணி 01, 2023

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்