Funeral Arrangements | இறுதிச் சடங்கு விபரங்கள்
Viewing / அஞ்சலி செலுத்தும் நேரம்
Wednesday, August 5, 2026
5:00 PM – 7:00 PM
Funeral Service / இறுதிச் சடங்கு
Thursday, August 6, 2026
8:00 AM
Place / இடம்
Douglass Funeral Home
51 Worthen Road
Lexington, MA 02421
Phone: 781-862-1800
In Loving Memory | இரங்கல் அஞ்சலி
Manoranjitham “Ranji” SriKanthan
July 30, 2026
A Life of Love and Selfless Devotion
அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஓர் இனிய வாழ்வு
Manoranjitham “Ranji” SriKanthan, age 72, passed away peacefully on July 30, 2026, surrounded by her loving family after a long illness. Though our hearts are filled with sorrow, we remain deeply grateful for the beautiful life she lived and the love she shared with everyone around her.
72 வயதான திருமதி மனோரஞ்சிதம் (ரஞ்சி) ஸ்ரீகாந்தன் அவர்கள், நீண்டகால உடல்நலக் குறைவின் பின்னர், 2026 ஜூலை 30 ஆம் நாள், தனது அன்பு குடும்பத்தினரின் அரவணைப்பில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார். அவரை இழந்த துயரத்தில் எங்கள் இதயங்கள் கனத்திருந்தாலும், அவர் வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கைக்கும், அனைவரிடமும் பகிர்ந்த அன்பிற்கும் நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
A Devoted Wife, Mother, and Grandmother
அன்பான மனைவி, தாய், பாட்டி
Ranji shared 53 wonderful years of marriage with her beloved husband, Thillaiampalam SriKanthan. Together they built a home founded on love, respect, sacrifice, and faith. She was a devoted mother to Shivanthy, a caring mother-in-law to Dermot, and a proud grandmother to Adam, Nisha, and Mia. Her family was the center of her life.
தனது அன்புக் கணவர் திரு. தில்லைஅம்பலம் ஸ்ரீகாந்தன் அவர்களுடன் 53 ஆண்டுகள் அன்பும், புரிந்துணர்வும், தியாகமும் நிறைந்த இனிய இல்லற வாழ்க்கையை வாழ்ந்தார். மகள் சிவாந்தி, மருமகன் டெர்மட், பேரப்பிள்ளைகள் ஆடம், நிஷா, மியா ஆகியோரின் மீது அளவற்ற பாசம் கொண்ட அன்புத் தாயும் பாசமிகு பாட்டியுமாவார். குடும்பமே அவரது உலகமாக இருந்தது.
A Life Built Through Dedication
உழைப்பால் உயர்ந்த வாழ்க்கை
Married at the age of 19, Ranji immigrated to the United States with her husband in 1973. Through determination, humility, and hard work, she built a remarkable career at John Hancock Mutual Life Company, serving faithfully for 45 years and advancing from secretary to insurance analyst.
19 வயதில் திருமணம் செய்து கொண்டு, 1973 ஆம் ஆண்டு தனது கணவருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். கடின உழைப்பு, நேர்மை மற்றும் விடாமுயற்சியால் John Hancock Mutual Life Company நிறுவனத்தில் 45 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, செயலாளராகத் தொடங்கி காப்புறுதி ஆய்வாளராக உயர்ந்தார்.
A Heart That Lived for Others
பிறருக்காகவே துடித்த இதயம்
Ranji’s greatest gift was her kindness. Her home was always open, her table was always full, and every guest was welcomed with warmth and love. She found joy in cooking for family and friends, ensuring no one ever left her home hungry. She gave without expecting anything in return and always placed the needs of others before her own.
ரஞ்சி அம்மாவின் மிகப் பெரிய செல்வம் அவரது அன்பும் கருணையும் ஆகும். அவரது இல்லம் எப்போதும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் திறந்திருந்தது. அவரது வீட்டிற்கு வந்தவர்கள் யாரும் உணவருந்தாமல் திரும்பியதில்லை. சமையல் செய்வதும், அன்போடு பரிமாறுவதும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறருக்காக வாழ்ந்த தியாக உள்ளம் கொண்டவர்.
A Legacy That Will Never Fade
என்றும் நிலைத்திருக்கும் நினைவுகள்
Although Ranji is no longer with us in person, her love, kindness, generosity, and quiet strength will continue to live on in the hearts of her husband, daughter, grandchildren, family, and all who had the privilege of knowing her. Her life reminds us that true greatness is found not in wealth or recognition, but in love, compassion, and service to others.
ரஞ்சி அம்மா இன்று எம்முடன் உடலால் இல்லாவிட்டாலும், அவரது அன்பு, கருணை, தியாகம், எளிமை மற்றும் உயர்ந்த மனிதநேயம் அவரது குடும்பத்தினரின் இதயங்களிலும், அவரை அறிந்த அனைவரின் நினைவுகளிலும் என்றும் வாழும். செல்வத்தாலும் புகழாலும் அல்ல, அன்பாலும் மனிதநேயத்தாலும் தான் ஒரு வாழ்க்கை உயர்வடைகிறது என்பதை அவரது வாழ்வு எமக்கு உணர்த்துகிறது.
Forever Remembered
என்றும் நினைவில்
“Those we love never truly leave us. They live on in every heart they touched and every life they inspired.”
“நாம் உண்மையாக நேசித்தவர்கள் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரியமாட்டார்கள். அவர்கள் தொட்ட இதயங்களிலும், அவர்கள் விதைத்த அன்பிலும், அவர்கள் விட்டுச் சென்ற நற்குணங்களிலும் என்றும் வாழ்கின்றார்கள்.”
May her soul rest in eternal peace.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
