திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு எதிராக கண்டன பிரேரணை

திருகோணமலை திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வழமையான சம்பிரதாயங்களுடன் சபை ஆரம்பமான நிலையில் சபையின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு எதிராக கண்டன பிரேரணை (VIDEO) | Expropriation Batticalo Koneswaram Area

இன்றைய சபை அமர்வின்போது திருகோணமலையின் திருக்ணேஸ்வரர் ஆலய பகுதியினை பெரும்பான்மை சமூகத்தினால் சூறையாட முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரும் பிரேரணை அனைத்து கட்சி ஆதரவுடனும் தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏகமனதாக தீர்மானம்

இதன்போது திருகோணமலையின் திருக்ணேஸ்வரர் ஆலய பகுதியினை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைத்ததுடன் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அமைவாக அனைவரின் ஆதரவுடனும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த அமர்வில் பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொருட்களுக்கு ஒரு நாளைக்கு ஒவ்வொரு விலை அதிகரிப்பதால் எமது எதிர்காலம் பூச்சியத்தில்தான் போய்கொண்டிருக்கின்றது. எமது சபையால் 2022 இற்கு முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைகளில் 50 வீதமான வேலைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படாமலுள்ளன.

திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு எதிராக கண்டன பிரேரணை (VIDEO) | Expropriation Batticalo Koneswaram Area

வரவு செலவுத் திட்டம்

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. வருகின்ற மழைகாலத்திற்கு பாவிப்பதற்காக வேண்டிய பழுதடைந்துள்ள ஜே.சி.பி வாகனத்தை திருத்த வேண்டும். உலக வங்கியால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் கட்டப்பட்ட மீன் சந்தைத் தொகுதியை இம்மாத்திற்குள் திந்ந்துவைக்க வேண்டும். அதனைப் பார்வiயிடுவதற்கு உலக வங்கி பிரதிநிதிகள் எதிர்வரும் முதலாம் திகதி வரவுள்ளார்கள்.

இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில்தான் எதிர்காலத்தில் மேலும் பல செயற்றிட்டங்கள் எம்மை நாடி வரும். தற்போதைய நிலையில எமது சபையில் உள்ள நிதி போதாதுள்ளது ஆனாலும் அரசாங்கமும் எமக்கு எதுவித ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே உலக வங்கி மூலம்தான் உதவிகளைப் பெற்று கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. மகிழூரில் அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார மண்டபம இதுவரையில் முடிக்கப்படாமலுள்ளன. அக்கட்டடத்திற்குரிய மிகுதி நிதியை விரைவாக வழங்குதவற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் தெரிவித்திருக்கின்றார்.

திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு எதிராக கண்டன பிரேரணை (VIDEO) | Expropriation Batticalo Koneswaram Area

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட விதிகள் அனைத்தும் தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் அனைத்து கிராமங்களிலும் வீதிகள், வீடுகளும், வெள்ளத்தில் தாழும் நிலமை ஏற்படும்.

மக்களின் பாதிப்பு

இதனால் வருகின்ற மழை வெள்ளத்தில் மக்கள் பாதிப்படையும்போது அனைத்து விடைங்களும். எமது பிரதேச சபைக்குத்தான் வரவுள்ளது. எனவே அனைத்திற்கும் எமது சபை தயாராக இருக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

அதனை தொடர்ந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

அத்துடன் இதன்போது செயற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துமுரண்பாடுகளும் ஏற்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது என தெரிவித்தார்

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்