முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பகுதியில் பொதுமக்களின் விவசாய காணிகள், கைவிடப்பட்ட குளங்கள் உள்ளடங்களாக சுமார் இரண்டாயிரம் கெக்ரேயருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு வனவளத் திணைக்களத்தினால் காடுகளாக எல்லையிடப்பட்டுள்ளன.
எல்லையிடப்பட்டுள்ள காணிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலைப்பாணி, மூன்று முறிப்பு மற்றும் சிராட்டிகுளம் பறங்கியாறு ஆகிய பகுதிகளில் நீண்ட காலமக பொதுமக்களால் பயிர்செய்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில் 2009ம் ஆண்டு யுத்த சூழ்நிலைகளால் கைவிடப்பட்ட காணிகள் உள்ளடங்களாக சுமார் இரண்டாயிரம் கெக்ரேயருக்கும் அதிகமான பகுதிகள் வனவளத் திணைக்களத்தினால் காடுகளாக எல்லையிடப்பட்டுள்ளன.
ஏழு ஆண்டுகள் விடுவிக்கப்படாத காணிகள்
குறிப்பாக மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மூன்றுக்கும் மேற்பட்ட குளங்கள் மீள்குடியமர்வின் பின்னர் பெருந்தொகை நிதிகளில் புனரமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவற்றின் கீழான வயல் காணிகள் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மேலும் பல காணிகள் இவ்வாறு எல்லையிடப்பட்டுள்ளன.
இணைப்பு (Source): https://tamilwin.com/article/lands-demarcated-by-forest-department-mullaitivi-1666562768