தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் நிறுவுவதற்குப் பதிலாக இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

Link: https://www.einpresswire.com/article/618631622/india-should-demand-a-restoration-of-tamil-sovereignty-in-sri-lanka-instead-of-reinstalling-the-ltte-says-us-tamils

தமிழீழ விடுதலைப் புலிகள்

சமீபத்தில் பைடனுக்கான தமிழர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டனர், இது சீனவை இலங்கையிலிருந்து வெளியேற்றும் வழியைக் கூறுகிறது. அவர்களின் பத்திரிகை அறிக்கையின் தமிழ் பதிப்பு இங்கே:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் நிறுவுவதற்குப் பதிலாக இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இயங்கும் பைடனுக்கான தமிழர்கள் என்ற அமைப்பே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர பரிவர்த்தனைகளின் விளைவாகும்.

அதுவும் தமிழர்களின் ஆலோசனை, பங்கேற்பு அல்லது ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.

இந்தநிலையில் முழு தமிழின இறையாண்மையை மீட்டெடுப்பதே இலங்கையில் இருந்து சீனாவை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும்.

அவ்வாறு செய்தால், தமிழர்களைக் காப்பாற்றுவது என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்தியப் படையெடுப்பு குறித்து இலங்கையும் இனி பயப்படத் தேவையில்லை என்றும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் இறந்துவிட்டதாக கூறப்படும்; தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அண்மையில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு மத்தியில் பைடனுக்கான தமிழர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் தோன்றுவார் என்றும் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார்.

பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள், இந்த செய்தி உண்மையோ இல்லையோ, இலங்கை தீவில் பொருளாதார செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவுக்கு பதிலாக அரசியல் வழிகாட்டுதலுக்காக இலங்கையை இந்தியாவை நோக்கித் திரும்புவதற்கான அழுத்தத்தை உருவாக்க கசிய விடப்பட்ட தகவலாக எண்ணுகின்றனர்.

போரின் போது இலங்கை, இந்தியக் கொள்கையை எதிர்த்தது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செல்வாக்கு செலுத்துவதற்காக, தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதன் மூலமும் இந்தியா தமிழர் விடுதலை இயக்கத்தை ஆதரித்தது.

எனினும் 2002 இல் விடுதலைப் புலிகள் போரில் வெற்றிபெறும் தருவாயில் இருந்தபோது, இந்தியா அந்த முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதுடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி அதன் இராணுவ ஆதரவை விலக்கிக் கொண்டது.

சிங்கள ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மாகாண அதிகாரத்திற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திய 1987 ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13வது திருத்தமே இதற்கான தீர்வு என்று இந்தியா வலியுறுத்துகிறது.

எனினும், நடைமுறையில், இது தமிழர்களுக்கு உண்மையான அதிகாரம் இல்லாத ஒரு போலி கூட்டாட்சியாகவே இருந்து வருகின்றது.

இந்த 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர பரிவர்த்தனைகளின் விளைவாகும். இது தமிழர்களின் ஆலோசனை, பங்கேற்பு அல்லது ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

1987 இல், இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப் புலிகளை வலுக்கட்டாயமாக நிலைகுலையச் செய்ய முயன்று அவர்களுடன் முழு அளவிலான மோதலில் ஈடுபடும் நிலையை உருவாக்கியது. இது 1990ல் நேரடியாக இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேற வழிவகுத்தது.

இலங்கை ஜனாதிபதி பிரேமதாச சமாதானப் பேச்சுக்களை கைவிட்டு விடுதலைப் புலிகளை வேரறுக்க முயன்றதை அடுத்து, இலங்கைத் தீவில் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியது.

இந்தநிலையில் 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதன் விதிகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரை வடகிழக்கு இலங்கையை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, சீனாவின் பிரசன்னம் இலங்கை தீவில் இருக்கவில்லை.

இப்போது விடுதலைப் புலிகள் திரும்புவதும், இலங்கையில் போர் மூளுவதும் சீனர்களை விரட்டியடிக்க உதவும் என்று இந்தியா நினைக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, முழு தமிழ் இறையாண்மையை மீட்டெடுப்பதே சீனர்களை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும்.

அதேநேரம் சுதந்திர தமிழ் அரசு என்ற யதார்த்தத்தை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்தால், தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியப் படையெடுப்புக்கு இலங்கையர்கள் இனி பயப்படத் தேவையில்லை.

அத்துடன் சீனா மற்றும் இந்தியாவின் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் நட்பு அண்டை நாடுகளாக இருக்க முடியும்.

அது இலங்கைத் தீவின் அமைதியானது பிராந்தியம் முழுவதும் புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Useful Links:

Link to TAMIL REBELS AGREE TO GIVE UP ARMS : https://www.washingtonpost.com/archive/politics/1987/08/05/tamil-rebels-agree-to-give-up-arms/fc11e06a-00c6-475c-a08e-4698b8bbc508/
Link to The Indo_lanka Accord: https://www.sangam.org/FB_HIST_DOCS/ISL%20Accord%20.htm

Link to FACTBOX-India’s role in Sri Lanka’s civil war: https://www.reuters.com/article/idUKCOL223047

Link to Indira Gandhi had asked Margaret Thatcher to stop helping Sri Lanka militarily::
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indira-gandhi-had-asked-margaret-thatcher-to-stop-helping-sri-lanka-militarily/articleshow/29210879.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்