யாழ் – பலாலி சந்தியில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம், புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் நிறைந்த, நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு, இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் போராளிக்கு வீடு கையளிப்பு
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் விஸ். நடராஜாவின் நிதிப் பங்களிப்பில் இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவின் ஆளணி உதவியில் கட்டி முடிக்கப்பட்ட வீடு இன்றைய தினம் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் விகும் லியனகேயினால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு வடமராட்சி வடக்கு புலோலி கிழக்கு பகுதியில் மதியம் 1:30 மணியளவில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவருக்கே இராணுவ தளபதியால் சம்பிரதாய பூர்வமாக வீடு கையளிக்கப்பட்டது.

