அமெரிக்கத் தமிழர்கள், தமிழர் பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மாணவர்களின் அரசியல் நடவடிக்கையை வரவேற்கின்றனர் மற்றும் ஜேவிபி செயலாளர் டில்வின் சில்வாவிற்கு பதிலளிக்கின்றனர்
சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களும் தற்போதைய மாணவர்களும், தமிழர் பொது வாக்கெடுப்புக்கு (ரெஃபெரெண்டம்) அவர்களின் அரசியல் நெறிமுறையாகவும் தேர்தல் அறிக்கையாகவும் முன்னிறுத்தியிருப்பதை விளக்கிக் காட்டிய ஒரு யூட்யூப் காணொளி வெளிவந்தது.
தமிழர்களுக்காக அரசியல் தீர்வுகளைத் தேவையில்லை எனக் கூறிய ஜேவிபி செயலாளர் டில்வின் சில்வாவின் அறிக்கைக்கு பதிலளிக்கையில், யாழ் மாணவர்கள் தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவது அவரது பொறுப்பு அல்ல என்றும், தமிழர்களின் எதிர்காலத்தை அவர்கள் தான் வாக்கெடுப்பு மூலம் முடிவெடுக்க வேண்டும் என்றும் திடமாகக் கூறினர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு, முதன்முறையாக தமிழ் ஈழத்தில் இந்த தைரியசாலி தமிழ் மாணவர்கள் வாக்கெடுப்புனை (ரெஃபெரெண்டம்) அவர்களின் தீர்வுகாணும் முக்கியக் கருவியாக முன்வைத்துள்ளனர்.
அவர்களின் செய்தியாளர் கூட்டத்தில், அவர்கள் சர்வதேச சமூகத்தை தமிழரின் பிரச்சினைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்து, தமிழர் வாக்கெடுப்பு நடைமுறைப்படுத்த கோரினர். மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் தங்கள் கோட்பாட்டிற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
நாங்கள் அமெரிக்கத் தமிழர்கள், அவர்களின் முக்கியமான முயற்சியை வரவேற்கின்றோம் மற்றும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்.