ஜனநாயகத்தில் , ஆர்ப்பாட்டம் அல்லது புறக்கணிப்புகள் ஜனநாயகத்திற்கு தேவையானவை.
திரு. சுமந்திரன் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வரவிருக்கும் உள்நாட்டு தேர்தலுக்கான மேலதிக பணத்தை தெண்ட கனடாவிற்கு இந்த மாதம் வந்து சென்றார் .
குறிப்பாக, வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஸ்ட்டி ஆகியவற்றை வேண்டாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்களத்துக்கு சரணடைந்ததுடன், சிங்கள பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தது. பின்னர் இடைக்கால அறிக்கையை சுட்டிக்காட்டியது, தமிழர்களுக்கான கடல், நிலம், வானம் ஆகியவற்றிலிருந்து சொத்துக்களைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டது . இது முற்றிலும் ஒரு துரோகம். தமிழர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், பாதுகாப்பதற்கும், சமஸ்ட்டியுடன் வடகிழக்கு இணைப்புக்காக கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தரவாதம் அளித்தது.
தொடர்ந்து பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டணி, தங்கள் ஆதரவை பணத்திற்காக எந்தவொரு சட்டத்திற்கும் தக்கவைத்துக் கொள்கிறது. இது ஒரு லஞ்சம். இது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் நம்பகத்தன்மையை இழந்தனர். இவர்கள் லஞ்சம் பணம் பெற்றதன் மூலம் தமிழர்களின் பிரநிதிப்படுத்தும் அந்தஸ்தினை இழக்கின்றார்கள். சிங்கள மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் இந்தியாவின் பார்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டாள்தனமாக மாறியுள்ளது. இது தமிழர்களுக்கு ஒரு அவமானம்.
இவர்களின் தவறான போக்கிற்காக, தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தலானது வெளிநாட்டு பண வினையோகமற்ற அனைவரும் சம நிலையில் இருக்கக்கூடியவாறு அமைய வேண்டும்
ஒரு கட்சிக்கு பணம் கொடுக்கும்போது, ஜனநாயகம் அழிக்கப்படும்.
கனடியத் தமிழர்களிடம் திரு. சுமந்திரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட பணத்தை தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் லஞ்சம் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ் இளைஞர்களை தேர்தல் பிரச்சாரத்தில் T.N.A. பாவிப்பதற்கு இந்த கனடா பணத்தை பாவிக்கிறது. இளைஞர்களுக்கு தினசரி பிரச்சாரம் செய்த பின்னர், இரவு சாப்பாட்டுக்கு மதுவும் மற்றும் கோழி பிரியாணி ஆகியவற்றைப் கொடுத்து ஒவ்வொரு நாளும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட பணம், உள்நாட்டு தமிழ் ப்பகுதிகளில் வாக்களிக்கும் முறையை அழித்துவிடும். தமிழர்கள் கவனக்குறைவாக அழிக்கப்படுவார்கள், இதனால் ஏற்படும் தவறுகள் தமிழ் மக்கள் மீண்டும் தவறான ஒரு முடிவை எடுப்பதாக அமையும்
அதேபோல தமிழ் இளைஞர்களுக்கு இலவச மதுபானங்களை அருந்தி அவர்களின் வாழ்க்கையும் அழித்துவிடப்படும் . 2015 தேர்தலுக்குப் பின்னர், இளைஞர்களின் நடத்தை மாறிவிட்டது, ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இளைஞர்களைப் TNA பயன்படுத்திய பின்னர் இலவச மதுபானங்களை கொடுத்தார்கள்.
சுமந்திரனுக்கு பணம் கொடுத்த கனடாவில் உள்ள கடைகள் மற்றும் வியாபார தலங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு தாயகத்தில் நம் தமிழர்களின் நல்ல எதிர்காலத்திக் க்காக நாம் வேண்டி கொள்கிறோம்.
நன்றி
புலம் பெயர்ந்த தமிழரின் செய்திகள்
January 29, 2018