Link: https://www.pathivu.com/2020/02/cv.html
1. சிங்களமொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்குமொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்கள மொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும் மக்கள் மொழிவாரியாகவே அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.
2. தமிழ் மொழியும் இந்து மதமும் புத்தர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் ஒருங்கே பேசப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வந்துள்ளன. நாட்டைக் காக்கும் ஐந்து ஈஸ்வரங்களும் புத்தகாலத்திற்கு முற்பட்டவை.
3. புத்தசமயம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழரே. அந்தக்காலத்தில் சிங்களவர் என்ற ஒரு மொழிவாரியான இனம் வருங்காலத்தில் பலநூற்றாண்டுகள் கழிந்து இருக்கப் போகின்றது என்று எவரும் கனவில் கூட சிந்தித்திருக்கவில்லை.
4. மகாவம்சம் பாளிமொழியில் எழுதப்பட்ட ஒருபுனைகதை. அதற்கும் சிங்களத்திற்கும் அல்லது சிங்களவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. புனைகதையைப் புனைகதையாகவே நாம் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும்!
5. ஆதிகால சிங்களம் என்று ஒன்றிருந்தது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஒருமொழியையும் அதனைப் பேசமுற்படுபவர்களையும் இந்தச் சொற்றொடர் குறிப்பதானால் பின்னர் சிங்களவரும் சிங்களமொழியும் வரப்போகின்றன என்று கி.மு.300 ம் ஆண்டிலே ஜோதிடம் பார்த்து கூறியிருந்தார்களா? பின்னர் வந்த சிங்கள மொழியில் காணும் சொற்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததென்றால் வேற்றுமொழியில் இருந்த சொல்லையோ சொற்றொடரையோ சிங்களம் பின்னர் ஏற்றுக்கொண்டதென்பதே உண்மை.
நான் என்ன கூறிவிட்டேன் பிளவை ஏற்படுத்த?
- சிங்களமொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழங்குமொழியாகப் பரிணமித்தது. அதற்கு முன்னர் சிங்களவர் என்று கூறப்படும் சிங்கள மொழி பேசுபவர்கள் இந்த உலகத்திலேயே எங்கேயும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் சிங்களவர் என்று நாம் அடையாளம் காணும் மக்கள் மொழிவாரியாகவே அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.
- தமிழ் மொழியும் இந்து மதமும் புத்தர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் ஒருங்கே பேசப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வந்துள்ளன. நாட்டைக் காக்கும் ஐந்து ஈஸ்வரங்களும் புத்தகாலத்திற்கு முற்பட்டவை.
- புத்தசமயம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழரே. அந்தக்காலத்தில் சிங்களவர் என்ற ஒரு மொழிவாரியான இனம் வருங்காலத்தில் பலநூற்றாண்டுகள் கழிந்து இருக்கப் போகின்றது என்று எவரும் கனவில் கூட சிந்தித்திருக்கவில்லை.
- மகாவம்சம் பாளிமொழியில் எழுதப்பட்ட ஒருபுனைகதை. அதற்கும் சிங்களத்திற்கும் அல்லது சிங்களவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. புனைகதையைப் புனைகதையாகவே நாம் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும்!
- ஆதிகால சிங்களம் என்று ஒன்றிருந்தது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஒருமொழியையும் அதனைப் பேசமுற்படுபவர்களையும் இந்தச் சொற்றொடர் குறிப்பதானால் பின்னர் சிங்களவரும் சிங்களமொழியும் வரப்போகின்றன என்று கி.மு.300 ம் ஆண்டிலே ஜோதிடம் பார்த்து கூறியிருந்தார்களா? பின்னர் வந்த சிங்கள மொழியில் காணும் சொற்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததென்றால் வேற்றுமொழியில் இருந்த சொல்லையோ சொற்றொடரையோ சிங்களம் பின்னர் ஏற்றுக்கொண்டதென்பதே உண்மை.
முன்னர் காணப்பட்டவை சிங்கள எழுத்துக்கள் அல்லது ஆதி சிங்கள எழுத்துக்கள் என்று அர்த்தமில்லை. பின்னையவற்றை முன்னையவற்றின் சாயலைக் கொண்டிருப்பதாகக் கூறலாம். ஆனால் பின்னையதுதான் முன்பும் இருந்தது என்று கூறமுடியாது. முன்னையது இருந்தகாலத்தில் பின்னையது நினைக்கப்படக்கூடவும் இல்லை.
இவ்வாறு பலவற்றை நான் உண்மையெனக் கண்டு கூறுகின்றேனேஒளிய மக்களுக்குள் பிளவுஏற்படுத்த நான் முனையவில்லை. சிங்களமக்கள் மத்தியில் பிறந்து, படித்து, வாழ்ந்துவந்தவன் நான். என் அன்புமிக்க மருமகள் மார்கள் சிங்களவர்கள்.
சிங்கள மக்கள் மீது எனக்குப் பகையோ வெறுப்போ இல்லை. ஆனால் பொய்மையில் இலங்கை உழல்வதைக் காணப் பொறுக்கமுடியாது இருக்கின்றது. நான் உண்மையைக் கூறிவருகின்றேன். நான் கூறும் உண்மைகளில் பலவற்றை பேராசிரியர் இந்திரபால 2005 ல் எழுதிய நூலில் காணலாம். நான் கட்டுக் கதைகளை வெளிக்கொண்டு வரவில்லை. இனத்துவேசம் மிக்கவர்களே இதுகாறும் பொய்களையும் புனைகதைகளையும் உண்மையென சிங்கள மக்களை நம்பவைத்துள்ளார்கள். ஆகவே பிளவு ஏற்படப் போகின்றதென்றால் புனைகதைகளை முதலில் அரங்கேற்றியவர்களேதற்குக் காரணம். நான் அல்ல என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.