தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள தலைவர்களை தமிழர்கள் ஏன் வரவேற்கின்றார்கள்

மைத்திரியின் யாழ் விஜயத்தில் தமிழர்கள் ஏன் பங்குகொண்டார்கள் ?
3 நாள் பயணமாக யாழ்ப்பாணம் சென்றிருந்த மைத்திரியை தமிழர்கள் சந்தித்ததுவும், பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததுவும், போரில் இறந்த தமிழர்களை தாழ்மைத் படுத்தியது.

தமிழ் இனப்படுகொலைக்கு காரண கர்த்தாவாக இருந்த பலர்களில் ஒருவரான மைத்திரியை , மணிவண்ணன், அனந்தி சசிகரன் ஆகியோர் சந்தித்தமையானது, போரின் போது இறந்த வீரர்களை அவமதிப்பதாகும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போரின் இறுதி நாட்களில், தான் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றி பல தமிழர்களை கொன்றதாய் பெருமைப்படும் இந்த இனப்படுகொலையாளி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி வேட்பாளராக அன்று இருக்கும் போது, தான் சிங்கள தேசபக்தர் என்று தெரிவித்தார்.ஜெனரல் பொன்சேகா இராணுவத்தின் தலைமையில் விடுதலைப் புலிகளின் பெரும்பாலான தலைவர்கள் கொல்லப்பட்ட போரின் கடைசி இரண்டு வாரங்களில், நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றும்

“அதற்கு முன்னர் யுத்தம் உச்சக்கட்டத்தின் போது ஐந்து முறை பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டுள்ளேன்,” என பெருமைப்பட்ட மைத்திரியை ஏன் தமிழர்கள் வரவேற்றனர். நமது வீரத் தமிழர்களையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்றொழித்தவரை தமிழர்கள் இன்றும் வரவேற்பது வருத்தமாக இருக்கிறது. மைத்திரிபால சிரிசேன எமது வரலாற்றில் மிக மோசமான நபர். 2009 மே மாதம், போரின் கடைசி இரண்டு வாரங்களில் சிங்களப் போரை நடத்தி முடித்தவர். மைத்திரிபால சிறிசேனாவை சில தமிழ் பொதுமக்கள் கூட சென்று பார்த்தனர். இந்த கொலைகாரனை வைத்து படம் எடுத்த இந்த தமிழர்கள் இரக்கமற்றவர்கள், இறந்தவர்களிடமும் அவர்களின் உறவினர்களிடமும் கருணை காட்டாதவர்கள் என்பதை காட்டுகிறது. இது உங்களுக்கு அவமானம். இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்.

மைத்திரியை பார்க்கச் சென்ற தமிழர்கள், சுதந்திரத்திற்காக போராடிய தீவிர போரை நகைச்சுவையாக ஆக்குகிறார்கள். போருக்கு முன்னர், சிங்களத் தலைவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, ​​தமிழர்கள் “செருப்பு” மற்றும் கற்களை வீசினர். பெரும்பாலும் நிகழ்வைப் புறக்கணிக்தார்கள் . இப்போது இந்த தமிழர்களே, தமிழர்களின் எதிரிகளை வரவேற்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களை பலவீனப்படுத்துகின்றன. தமிழர்களின் இத்தகைய நடத்தைகள் சிங்களத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையை எளிதாக்குகிறது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது 1000 விகாரைகள் கட்டவும், நல்லிணக்க அரசாங்கம் நடத்துகிறோம் என்ற பெயரில் சுமந்திரனோடு சேர்ந்து தமிழர் தாயகப்பகுதியான வவுனியாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களை குடியேற்றி அவர்களுக்கு காணி உறுதியையும் வளங்கியவர்.

காணாமலாக்கப்பட்ட தமிழ் பிள்ளைகள் சிலருடன் நின்று புகைப்படம் எடுத்துவிட்டு, அந்த பிள்ளைகளின் பெற்றோர், பிள்ளைகளை ஒப்படைக்கும் படி கேட்டபோது, தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று வெளிப்படையாக கூறியவர். தமிழர் தாயகத்தில் பௌத்த கோவில்கள் பல உருவாவதற்கு காரணமாக இருந்தவர். சுமந்திரனை பயன்படுத்தி, இலங்கையின் மற்ற மதங்களை விட பௌத்த மதமே முதன்மையானது என்று பாராளுமன்றில் கூறவைத்தவர். இப்படியாக பல தமிழர் விரோத செயலில் ஈடுபட்டதோடு, தமிழ் இனப்படுகொலைக்கு காரண கர்த்தாவாக இருந்த இவரை, வடக்கின் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக்கொள்ளும் மணிவண்ணன், அனந்தி சசிகரன் ஆகியோர் சந்தித்தமையானது மிகுந்த வேதனை தரும் விடையமாக இருக்கின்றது. அதுவும், எந்த முக்கியமற்றவராக தற்போது இருக்கும் மைத்திரியை, இந்த தமிழ் தலைவர்கள் என்ன நோக்கத்திற்காக சந்திக்க வேண்டும், இவர்கள் தான் எமக்கு வழி காட்ட போகிறார்களா? கேவலம்.

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்