விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே: மைத்திரி போட்டுடைத்த விடயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 1956இல் சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின.

அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. செல்வா – பண்டா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் நடைமுறையாகி இருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டார்.

நாட்டில் போரும் ஏற்பட்டிருக்காது. எனவே பிக்குகளே பிரபாகரனை உருவாக்கினர். அதேபோல டட்லி – செல்வா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்