Cardiac Arrest: What You Need to Know/மாரடைப்பு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

மாரடைப்பு (அல்லது திடீர் மாரடைப்பு) என்பது உங்கள் இதயம் திடீரென அடிப்பதை நிறுத்தும் நிலையாகும். இதனால் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் நிற்கும். இது ஒரு மருத்துவ அவசரநிலை, உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகும். உடனடியாக 911 அழைக்கவும்.

அறிகுறிகள்

மாரடைப்பு திடீரென நடக்கும், மேலும் நீங்கள்

  • திடீரென விழுந்துவிடலாம்
  •  உணர்விழக்கலாம்
  • நாடித்துடிப்பு (Pulse) இருக்காது
  • சுவாசிக்க முடியாது

சிலர் முன்பே அதிக களைப்பு, மயக்கம், மூச்சுத்திணறல், வாந்தியுணர்வு, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். சில நேரங்களில் எச்சரிக்கையும் இல்லாமல் நேரடியாக ஏற்படலாம்.

மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?

இதயத்தின் மின்சார அமைப்பு இதயத்துடிப்பை கட்டுப்படுத்துகிறது.

  • மின்சாரச் சமிக்ஞைகள் சரியாக வேலை செய்யாதபோது அசாதாரண இதயத்துடிப்பு (Arrhythmia) ஏற்படலாம்.
  • மிகவும் ஆபத்தான ventricular fibrillation எனும் தன்மை இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்திவிடும்.
  • இதனால் இதயம் சரியாக இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது, மேலும் இது சில நிமிடங்களில் உயிருக்கு ஆபத்தாக இருக்கும்.

இதய நோய்களுடனான தொடர்பு

மாரடைப்பு ஏற்படும் பெரும்பாலானவர்களுக்கு coronary artery disease உள்ளது.

  • இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் இதயக் கோளாறு (Heart Attack) ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • இதயக் கோளாறு ஏற்பட்டால் இதயத்தின் மின்சார அமைப்பு பாதிக்கப்படும், மேலும் இது மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

மற்ற காரணிகள்

மாரடைப்பு ஏற்படக்கூடிய பிற காரணிகள்:

  • மிகுந்த இரத்த இழப்பு அல்லது ஆக்ஸிஜன் பற்றாக்குறை
  • இதய நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான உடற்பயிற்சி
  • Potassium அல்லது Magnesium அதிக அளவில் இருந்தால்
  • மரபணுவழி (Genetic) ஏற்படும் இதயத்துடிப்பு கோளாறுகள்
  • இதயத்தின் அமைப்பு மாற்றங்கள், உதாரணத்திற்கு, பெரிதாக விரிவடைந்த இதயம் (Enlarged Heart)

இதயக் கோளாறும் மாரடைப்பும் ஒன்றே அல்ல

  • இதயக் கோளாறு (Heart Attack) என்பது இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது.
  • மாரடைப்பு (Cardiac Arrest) என்பது இதயத்துடிப்பு முற்றிலும் நின்றுவிடும் நிலை.
  • ஆனால், இதயக் கோளாறு ஏற்பட்ட பிறகு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மாரடைப்புக்கு ஆபத்து அதிகம் இருப்பவர்கள்

நீங்கள் மாரடைப்புக்கு அதிக ஆபத்து உடையவராக இருக்கலாம், யாருக்கு?

  • Coronary Artery Disease இருந்தால் (முக்கியமான காரணி)
  • ஆணாக இருந்தால்
  • உங்கள் குடும்பத்தில் இதய நோய்கள் இருந்தால்
  • புகைபிடித்தல் அல்லது போதைப்பொருள் பயன்பாடு
  • முந்தைய இதயக் கோளாறு (Heart Attack) இருந்தால்
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய செயலிழப்பு (Heart Failure) இருந்தால்
  • உடல் எடை அதிகமாக இருந்தால்

மனஅழுத்தம் மற்றும் மாரடைப்பு தொடர்பு

அதிகமான மனஅழுத்தம் மற்றும் கோபம் மாரடைப்பை தூண்டலாம். அதிகமான மனச்சோர்வு, கவலை (Anxiety), மனநிலை பாதிப்புகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

  • உடனடியாக 911 அழைக்கவும்
  • அருகில் AED (Automated External Defibrillator) இருந்தால் பயன்படுத்தலாம்
  • CPR (Cardiopulmonary Resuscitation) செய்வதை தொடங்கவும்
  • மருத்துவர்கள் வரும்வரை மீண்டும் இதயத்துடிப்பை இயல்பாக செய்ய முயற்சிக்க வேண்டும்

மருத்துவமனையில் சிகிச்சை

மாரடைப்பு ஏற்பட்ட பின்னர், மருத்துவர்கள் காரணத்தை கண்டறிந்து தேவையான சிகிச்சையை அளிப்பார்கள்.

  • இதய அடைப்பை சரிசெய்ய Coronary Bypass Surgery அல்லது Angioplasty செய்யலாம்
  • இதயத்துடிப்பை கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படும்
  • மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆலோசிக்கப்படும்

மீண்டு வந்த பிறகு இதய நிபுணரை (Cardiologist) சந்திக்க வேண்டும்

மீண்டு வந்த பிறகு, உங்கள் இதயத்துடிப்பு முறையை (Heart Rhythm) கண்காணிக்க, சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படலாம்.

  • Electrocardiogram (EKG): இதயத்துடிப்பின் மின்சார நடவடிக்கையை கண்காணிக்கும்
  • Echocardiogram: இதயத்தின் வடிவம், அளவு மற்றும் செயல்பாட்டை பார்ப்பதற்கான சோதனை
  • Cardiac MRI: இதயத்தின் செயல்பாட்டை விரிவாகப் பார்ப்பதற்கான சோதனை

ICD (Implantable Cardioverter Defibrillator) தேவைப்பட்டால்

மீண்டும் மாரடைப்பு வருவதை தடுக்க, ICD (Implantable Cardioverter Defibrillator) எனப்படும் ஒரு சிறிய இயந்திரம் உடலில் பொருத்தப்படும்.

  • இது இதயத்துடிப்பை கண்காணிக்க
  • சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டால் மின்சாரம் அனுப்பி இதயத்துடிப்பை மீண்டும் இயல்பாக்கும்

மாரடைப்பை தடுப்பதற்கான வாழ்க்கை முறைகள்

நீங்கள் தினசரி பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டால், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும் இதய ஆரோக்கியத்தை பேணுவதற்கும் உதவும்.

  • உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றவும்: பழங்கள், காய்கறிகள், முழுமையாக உள்ள தானியங்கள், குறைந்த கொழுப்பு நிறைந்த புரத உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
  • உடல் எடையை சீராக வைத்திருக்கவும்: உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்
  • மன அழுத்தத்தைக் குறைக்கவும்: மனநிலை மாற்றங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்
  • தினசரி உடற்பயிற்சி செய்யவும்: வாரத்திற்கு 150 நிமிடங்கள் யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யலாம்
  • புகைப்பிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தவும்: இது இதய நோய்க்கும், மாரடைப்பிற்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாகும்

முக்கிய நினைவு

  • மாரடைப்பு என்பது ஒரு மருத்துவ அவசரநிலை
  • உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க மருத்துவரை சந்திக்கவும்வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

Cardiac Arrest: What You Need to Know

What Is Cardiac Arrest?

Cardiac arrest, also called sudden cardiac arrest, happens when the heart suddenly stops beating, cutting off blood flow to the brain and other organs. It is a medical emergency that can be fatal if not treated immediately. Call 911 right away if you suspect cardiac arrest.

Symptoms

Cardiac arrest occurs suddenly and can cause immediate collapse, unconsciousness, no pulse, and no breathing. Some people experience warning signs such as extreme fatigue, dizziness, shortness of breath, nausea, or chest pain, but it can also happen without any warning.

What Happens During Cardiac Arrest?

The heart’s electrical system controls its rhythm. If these electrical signals become disorganized, an abnormal heart rhythm (arrhythmia) can occur. The most dangerous type is ventricular fibrillation, which prevents the heart from pumping blood effectively. This can be fatal within minutes.

Connection to Heart Disease

Many people who experience cardiac arrest also have coronary artery disease. This condition reduces blood flow to the heart and can cause a heart attack, which may lead to electrical system damage and increase the risk of cardiac arrest.

Other Causes

Cardiac arrest can also be triggered by:

  • Severe blood loss or oxygen deprivation
  • Strenuous exercise in individuals with heart conditions
  • High potassium or magnesium levels, which can cause dangerous heart rhythms
  • Genetic conditions that affect heart rhythm
  • Structural heart changes, such as an enlarged heart or heart infections

Difference Between Cardiac Arrest and a Heart Attack

heart attack happens when blood flow to the heart is blocked, damaging heart tissue. In contrast, cardiac arrest is when the heart stops beating entirely. However, a heart attack can sometimes trigger cardiac arrest.

Difference Between Cardiac Arrest and Heart Failure

Heart failure is a long-term condition where the heart weakens over time and cannot pump blood efficiently. In contrast, cardiac arrest is a sudden, life-threatening event that requires immediate treatment.

Who Is at Risk?

You are at a higher risk of cardiac arrest if you:

  • Have coronary artery disease (the biggest risk factor)
  • Are male
  • Have a history of arrhythmias or cardiac arrest
  • Smoke or use drugs/alcohol excessively
  • Have had a previous heart attack
  • Have diabetes, high blood pressure, or heart failure
  • Are obese

Emotional Triggers

Strong emotions, particularly intense anger, can trigger arrhythmias that may lead to cardiac arrest. Mental health issues like anxiety and depression can also increase the risk. Seeking help from a doctor or counselor can be beneficial.

Emergency Treatment

Immediate treatment with a defibrillator can restore a normal heartbeat. This device delivers an electric shock to the heart and must be used within minutes for the best chance of survival. Emergency responders carry defibrillators, and some public places have automated external defibrillators (AEDs) for bystanders to use.

How to Use an AED

AEDs are designed for anyone to use, even without training. They analyze heart rhythms and deliver a shock if needed. If you suspect someone is in cardiac arrest, call 911, find an AED if available, and perform CPR until help arrives.

Hospital Treatment

Doctors will monitor you closely to find the cause of the cardiac arrest and prevent future episodes. Treatments may include:

  • Coronary artery bypass surgery or angioplasty to restore blood flow
  • Medications to regulate heart rhythm
  • Lifestyle changes to reduce risk factors

Seeing a Cardiologist

After recovery, a cardiologist will assess your heart’s electrical system and create a treatment plan. This may include medications, dietary changes, and further testing.

Diagnostic Tests

Your doctor may recommend:

  • Electrocardiogram (EKG) – Measures electrical activity in the heart.
  • Echocardiogram – Uses ultrasound to check heart structure and function.
  • Cardiac MRI – Provides detailed images of the heart.
  • MUGA scan – Uses a small amount of radioactive material to evaluate heart function.
  • Cardiac PET scan – Assesses blood flow in the heart using a special tracer.

Cardiac Catheterization

cardiac catheterization procedure involves inserting a thin tube into a blood vessel to check for blockages or heart abnormalities. A special dye may be injected for X-ray imaging, and in some cases, angioplasty may be performed to open clogged arteries.

Implantable Cardioverter Defibrillator (ICD)

If you are at high risk of future cardiac arrest, your doctor may recommend an ICD. This small device, implanted under the skin, monitors your heart rhythm and delivers a shock if a dangerous arrhythmia is detected. Some ICDs also include a pacemaker to regulate the heartbeat.

Prevention: Lifestyle Changes

To lower your risk of cardiac arrest:

  •  Eat a healthy diet with plenty of vegetables, fruits, whole grains, and lean proteins.
  • Maintain a healthy weight—ask your doctor for guidance if needed.
  • Manage stress to keep emotions from affecting heart health.
  • Stay active—aim for 150 minutes of exercise per week, with your doctor’s approval.
  • Quit smoking, as it significantly increases the risk of heart disease and cardiac arrest.

By making these changes, you can reduce your risk and improve your overall heart health.

Thank you,
Tamil Diaspora News.
March 09, 2025
www.Tamildiasporanews.com