எங்கள் WhatsApp கைப்பற்றப்பட்டது – இப்போது பாதுகாப்பில் உள்ளது

அன்புள்ள நண்பர்களே,

எங்கள் WhatsApp கணக்கு புதன்கிழமை மாலை 7:00 (நியூயார்க் நேரம்) முதல் வியாழக்கிழமை இரவு 8:00 மணி வரை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் எங்கள் பெயரில் தவறான செய்திகள் பலருக்கும் அனுப்பப்பட்டன.

உலகம் முழுவதும் எங்கள் WhatsApp-இல் இணைந்திருக்கும் நண்பர்கள் பலர் தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக எங்களை தொடர்புகொண்டனர். அவர்களின் அக்கறைக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றிகள்.

குறிப்பாக: அமெரிக்காவில் நாங்கள் நன்றாக வாழ்கிறோம். நாங்கள் ஒருபோதும் யாரிடமும் உதவி அல்லது பணம் கேட்கமாட்டோம். நீங்கள் பெற்றிருக்கும் செய்திகள் அனைத்தும் நமது கணக்கை கைப்பற்றியவர்களிடமிருந்தே வந்தவை.

இதுபோன்ற நிகழ்வுகள் தனியாக எங்களிடமே இல்லை. கிழக்குப் பகுதியிலுள்ள சில தேவாலயத் தலைவர்களின் WhatsApp கணக்குகளும், தமிழ் செயற்பாட்டாளர்களின் கணக்குகளும் இதேபோன்று கைப்பற்றப்பட்டதாக தகவல் உள்ளது.

இப்போது நாங்கள் எங்கள் கணக்கை பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

உங்கள் WhatsApp கணக்கு யாரேனும் கைப்பற்றினால் உடனடியாக செய்ய வேண்டியது:

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: support@whatsapp.com
Subject (தலைப்பு): Lost/Stolen: Please deactivate my account

மின்னஞ்சல் உள்ளடக்கம் (Body):

Lost/Stolen: Please deactivate my account.

My phone number is: +[Country Code][உங்கள் முழு கைபேசி எண்]

My email address is: [உங்கள் மின்னஞ்சல் முகவரி]

உதாரணம்: உங்கள் கைபேசி எண் +1 (555) 123-4567 என்றால், அதை +15551234567 என குறிப்பிடவும்.

________________________________

முக்கியம்: WhatsApp உங்களிடம் தொடர்பு கொள்வது நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மூலமே. அதன்மூலமே உங்கள் கணக்கை மீண்டும் பெற முடியும். நாங்களும் இந்த முறையினைப் பின்பற்றியே எங்கள் கணக்கை மீண்டும் பெற்றுள்ளோம்.

உங்களின் அக்கறைக்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி.

அன்புடன்,
புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்