காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2078வது நாள் இன்று.
இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும் சரணடைந்த தமிழர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்றும் OMP நேற்று தெரிவித்தது.
முதலில் மன்னாரில் OMP உருவானபோது நாங்கள் நிராகரித்து ஆர்ப்பாடட்டம் செய்தோம். நிமல்க்கா பெர்னாண்டோ இதனை உருவாக்குவதற்கு தலைமை தாங்கினார்.
சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காகவே OMP உருவாக்கப்பட்டது.
சுமந்திரன் OMP க்கு மிகவும் ஆதரவாக இருந்தார் மற்றும் OMP ஐ உருவாக்குவதற்கு, ஜெனீவாவில் ICC விசாரணையை கைவிட்டார் என்பதை நாம் தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்த சுமந்திரனை தமிழ் அரசியலில் இருந்து தூக்கி வீசப்பட வேண்டும். அவரை மீண்டும் கொழும்புக்கு அனுப்ப வேண்டும்.
பல தமிழர்களைக் கடத்திச் சென்றும், குண்டுகள் போட்டும், தமிழரை கொன்றதும் இலங்கை இராணுவம்தான் என்று 2011 ஐநா குழு அறிக்கை கூறுகிறது.
2011 இல்,ஐ.நா குழு “நம்பகமான குற்றச்சாட்டுகளை” கண்டறிந்தது, அது நிரூபிக்கப்பட்டால், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.
காணாமல் போனோர் அலுவலகம் என்பது தொல்பொருள், வனவள திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற பிற அரசுத் துறைகளுடன் இணைந்து தமிழர்களை ஒடுக்குவதற்கான மற்றொரு சிங்கள ஸ்ரீலங்காவின் கருவியாகும்.
இந்த பொருளாதார நெருக்கடியின் கீழ், ஸ்ரீலங்கா இன்னும் அதன் அடக்குமுறையை தொடர்கிறது. IMF மற்றும் பிற பணக்கார நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு பணம் கொடுத்து அவர்களின் கஷ்டத்தை தீர்த்தால் ,அது அவர்களின் இன அழிப்புக்கு ஒட்சிசன் கொடுப்பதாககும்
OMP அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இலங்கையில், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி பேசுவது பயனற்றது மற்றும் நேரத்தை வீணடிப்பது என்று அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
தமிழர்களுக்கு உதவக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகிறோம்.
நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்
அக்டோபர் 27, 2022
இணைப்பு (Source):
https://tamilwin.com/article/missing-persons-vavuniya-office-1666912244