வடக்கில் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை கூறுகிறார் சிறிதரன்

drug use in the north sri lanka

போதைவஸ்த்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் இலங்கையின் முப்படையினரே  வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் மீது இந்த திட்டமிட்ட வேலைகளை அரசாங்கம் செய்துவருகிறது.

வடக்கு கிழக்கில் போதைவஸ்து பயன்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே சிறிதரன் எம்.பி. இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைவஸ்து பயன்பாடு பொலிஸ், இராணுவம், கடற்படை இவர்களுடைய கைகளில் தான் இதனுடைய நாணய கயிறுகள் உள்ளது.  அது மட்டுமன்றி  போதைவஸ்து கடத்துபவர்களையும் பயன்படுத்துபவர்களையும் இவர்களே ஊக்குவிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

போதைவஸ்த்து கடத்துபவர்களை  பொலிசார் கைது செய்வதில்லை.  எவ்வளவோ போதைவஸ்துக்கள்  இங்கே  வருது என்றால் அதை தடுக்க வேண்டியது கடற்படையினர் தான் இராணுவம் இதனை தடுக்க முடியும் அவ்வாறு செய்வதில்லை.

இலங்கையில் உள்ள படைகளில் 70% வடக்கு கிழக்கிலே இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும் இங்கு வருகிறது என்றால் இங்கே உள்ள இளைஞர்கள், யுவதிகளிடம்  இனிமேல் வரும் காலங்களில் இனம்பற்றி நிலம்பற்றி தங்களுடைய  இனக்குழுமம் பற்றி சிந்திக்க கூடாது என்பதற்காக  இவர்களை கோதுகளாக்குவதற்கு அரசாங்கம் இந்த வேலைகளை செய்கிறது.

இவைதொடரபில் தாய் தந்தையர்கள், மதபெரியார்கள் விழிப்புணர்வை செய்யவேண்டும்.  ஒவ்வோருவரும் தங்கள் பிள்ளைகளை கவனித்து அவர்கள் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் என்றார்.

இணைப்பு (Source): https://www.virakesari.lk/article/138410

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்