சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள்

மீண்டும் சுமந்திரன் குழுவின் பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் என்றும் உறுதி செய்கிறோம்.

இந்த பயணத்திற்கு நாங்கு நோக்கங்கள் இருந்தன:
* ராஜபக்சக்களுக்கு உதவுவது
* நிலுவையில் உள்ள ஐசிசி வழக்குகளில் இருந்து சிறிலங்காவை விடுவைப்பது
* புலம்பெயர் தமிழர்களை ஒற்றுமையை குழப்புவது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்
* இறுதியாக, அரசியல் அறிவு குறைந்த , பணத்திற்கு அலையும் TNA எம்பிக்கள் மத்தியில் அவரது தலைமையை மேம்படுத்துவது.

  1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை சந்திக்கவில்லை.
  2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர்.
  3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
  4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது.
  5. அவர்கள் அமெரிக்காவில் உள்ள சில தமிழ் அமைப்புகளையும் தமிழ் இளைஞர்களையும் சந்திக்க விரும்பினர். சுமந்திரனை சந்திக்க அனைவரும் மறுத்துவிட்டனர்.

சுமந்திரனின் குழுவின் அமெரிக்கப் பயணம் வேறுவிதமான வாய்ப்பைக் கொண்டிருந்தது என்பதை பைடனுக்கான தமிழர்கள் மீண்டும் குறிப்பிடுகின்றனர்.

ஒன்று, சம்பந்தனின் மரணத்திற்குப் பிறகு அவரது தலைமைத்துவத்தை உயர்த்துவது.
இரண்டாவது ஹைக்கில் ஐசிசியின் வழக்குரைஞர் கையில் நிலுவையில் உள்ள வழக்கை நிராகரிப்பதை உண்டுபண்ணுவது.
மூன்றாவது, புலம்பெயர் தமிழ் குழுக்களை, குறிப்பாக இளைய தமிழ் புலம்பெயர் அமைப்புகளை பலவீனப்படுத்துவது.

அவர் 2010 இலிருந்து GFT, USTPAC, B, CTC மற்றும் ATF ஆகியவற்றை வெற்றிகரமாக பலவீனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த அமைப்பில் பெரும்பாலோர் பல புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்ப்புகளை இழந்தனர், சிலருக்கு 1 அல்லது 2 உறுப்பினர்கள் மட்டும் தான் உள்ளது, சிலர 90% உறுப்பினர்களை இழந்தனர், சிலர தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர். சுமந்திரனின் சதியால் எல்லாம் நடந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக சுமந்திரன், அமெரிக்க தமிழர்களின் தீர்வுக்கான வாதத்தை சேதப்படுத்தியிருக்கலாம், அரசியல் தீர்வு தொடர்பாக இந்த அமெரிக்க கீழ்மட்ட அதிகாரிகளை குழப்பியும் இருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஒற்றையாட்சிக்குள் தீர்வாகும். 13வது திருத்தம் கூட ஒற்றையாட்சி அரசின் கீழ் வருகிறது.

நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்