நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. என்ற பாடல் பலரும் அறிந்ததே. மனித உடம்பின் நிலையாமையை எடுத்துக் கூறுவதற்காக கடுவளிச்சித்தரால் பாடப்பட்டதே இது. இந்தப் பாடலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அவர்கள் ஒருமுறை வடக்கு மாகாண சபையில் கூறியிருந்தார். வடக்கு மாகாண சபையில் வெளிநடப்புச் செய்யும்போது இந்தப் பாடலைப் பாடிய வண் ணம் பசுபதி அவர்கள் சபையை விட்டு வெளி யேறினார். ஆனால் இப்போது நந்தவனத்து ஆண்டி யார் என்பதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி அவர்கள் நன்கு தெரிந்திருப்பார் என்று நம்பலாம். நல்லாட்சி என்று கூறி அவர்களோடு சேர் ந்து சர்வதேச விசாரணையையும் கைவிட்டு; ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகளை நிறை வேற்ற கால அவகாசமும் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் நந்தவனத்து நாட கத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நல்லாட்சி எல்லாம் தரும் பொறுத்திருப் போம் என்பார் சம்பந்தர் அவர்கள். எங்கள் பொறுமையை அரசு சோதிக்கக் கூடாது என்று அதட்டலுடன் சொல்வார் எதிர்க் கட்சித் தலைவர். இவற்றையயல்லாம் கூறிக்கொண்டு பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து தங் கள் நலனை மட்டுமே கவனித்த தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, இப்போது எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டது. சுருங்கக்கூறின் நல்லாட்சிக்கு கூட்டமைப்பு வழங்கிய ஆதரவால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதற்கு அப் பால், தமிழ் மக்களுக்கு இருந்த சர்வதேசப் பலமும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. இது ஒருபுறமிருக்க, இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கடும் கோபம் கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென நான் கடுமையாகப் பாடுபட, கூட்டமைப்போ ஒரு காலத்தில் இனப்பிரச் சினைக்கான தீர்வுத் திட்டத்தை பாராளுமன் றத்தில் வைத்துக் கிழித்தெறிந்தவர்களுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு அவர்களின் தாளத் துக்கு ஆட்டம் போடுகிறது. இந்தாப்பார் நான் யார் என்று காட்டுகிறேன் என்பதுபோல ஜனாதிபதி மைத்திரிபால தன் விஸ்வரூபத்தை காட்டத் தலைப்பட்டுள்ளார். |
