அனுராவை தமிழர்கள் நம்ப வேண்டுமென்றால், தமிழர்களுக்கு எதிரான கடந்தகால அநீதிகளை மாற்றியமைத்தால் மட்டுமே நம்பிக்கையை உருவாக்கும் – அமெரிக்க தமிழர்கள்

அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் ஜே.வி.பி.யின் திறன் குறித்து ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர். தமிழர் நலன்களுக்கு எதிரான ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளின் வரலாற்றில் இருந்து இந்த சந்தேகம் எழுகிறது. கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரங்களும் அதற்கான நீதியும் நிலைநாட்டப்படும் வரை அனுரா அரசு மீது நம்பிக்கை ஏற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கையின் முன்னாள் தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அவர் மாற்றியமைக்க வேண்டும். இந்த தலைவர்களில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த, கோத்தயபாய ராஜபக்ஷக்கள், மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அடங்குவர்.  தமிழர் அபிலாஷைகளை ஜே.வி.பி எவ்வாறு எதிர்த்தது என்பதை தமிழர்கள் தெளிவாக நினைவுகூருகின்றனர். இது துரோகத்தின் ஒரு சிக்கலான வரலாறு,
இதில் அடங்குபவை :
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதற்கு எதிராக வாதிட்டது.
இனப் போரின் போது சமாதான உடன்படிக்கையை எதிர்த்தது.
வெளிநாட்டு சுனாமி உதவிகள் தமிழர் பகுதிகளுக்கு செல்வதை தடுத்தது.
தமிழர் நலன்களைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசியல் முடிவுகளுக்குப் பங்களித்தது.
இவ்வாறானதொரு வரலாற்றைக் கொண்ட ஜேவிபியை  இப்போது  தமிழர்கள் எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஒப்பந்தங்கள் மூலம் சிங்களத் தலைவர்களை நம்புவதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நம்பிக்கைத் துரோகத்தையே ஏற்படுத்தியது
இது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
நம்பிக்கையைத் தொடங்க, அமெரிக்கத் தமிழர்கள் அனுரா அரசு பின்வரும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்:
1. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், குறிப்பாக இன்னும் உயிருடன் இருக்கும், 2009இல் சிறுவர்களாக இருந்த, 10 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை, மீளவும் அவர்களின் தாய் தந்தையரிடம் ஒப்படைக்கவும்.
டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்கா கூறியதாக, புலம்பெயர்ந்தோர் கூறுகின்றனர்.
****2. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்து, பயங்கரவாத் தடுப்புச் சட்டம் (PTA) அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களின் பட்டியலையும் வெளியிடுங்கள்.
****3. தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களை நிறுத்துங்கள்.
4. தமிழர் பகுதிகளில் தொல்பொருள், வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி திணைக்களங்களின் தலையீடுகளை நிறுத்துங்கள்.
5. பௌத்த பிக்குகள் தமிழ் சமூகங்களை அச்சுறுத்துவதையும் கலாச்சார பாரம்பரியத்தை சீர்குலைப்பதையும் நிறுத்த  வேண்டும்.
****6. பௌத்த பிக்குகள், தமிழ் பிரதேசங்களுக்கு வருவதை நிறுத்துங்கள்.
7. தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி, சிப்பாய்களைத் தெற்கிற்கு மீண்டும் அனுப்ப வேண்டும்.
இந்த முகாம்கள் இருப்பதால் பல தமிழர்கள் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.
மேலும், பல தமிழ் இளைஞர்கள், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கைகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த முகாம்கள் சுரண்டல்  உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.
துஷ்பிரயோகம் மற்றும் நில அபகரிப்புச் செய்திகள் தமிழ் சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
8. சிங்களக் குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர காலனித்துவ திட்டங்களை நிறுத்துங்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுங்கள்.
9. தமிழர்கள்  வசிக்கும் பகுதிகளில் உள்ள புத்த கோவில்கள் மற்றும் சின்னங்களை அகற்றவும்.
இந்த கட்டுமானங்கள் தமிழ் கலாச்சார பாரம்பரியத்தை அழித்து, பழங்கால புராதன  இடங்களை சேதப்படுத்துகின்றன.
10. வெலி ஓயா என பெயர் மாற்றப்பட்ட மணலாறு பிரதேசத்தை தமிழ் மக்களிடம் மீள வழங்குங்கள்.
வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும்.
11. PTA ஐ ரத்து செய்:
தமிழர்களின் குரல்களை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிக்க வேண்டும்.
பொறுப்புக்கூறலுக்கான அழைப்பு:
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடந்த கால சிங்களத் தலைவர்கள் கண்ட வெற்று வாக்குறுதிகளையே அனுராவும் பின்பற்றுவார் என புலம்பெயர் தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சிங்கள பௌத்த உயரடுக்குகளும் பணக்கார சிங்கள புலம்பெயர் மக்களும் அனுராவை ஆதரிப்பதாக ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது.
இந்த ஆதரவு ஒற்றுமை என்ற போர்வையில் தமிழர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிலைநிறுத்துகிறது.
தமிழர்கள் ஏன் ஜேவிபிக்கு வாக்களித்தார்கள்:
ஜே.வி.பிக்கு கிடைத்த தமிழ் வாக்குகள் முன்னெப்போதும் இல்லாதது அல்ல.
கடந்த காலங்களில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற சிங்கள பெரும்பான்மை கட்சிகளுக்கு தமிழர்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜே.வி.பி.யின் பதாகையின் கீழ் மூன்று தமிழ் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டதை ஜே.வி.பி மேல் நம்பிக்கை என தவறாகக் கருதக் கூடாது.
இது ஒரு குறைபாடுள்ள அரசியல் அமைப்பிற்குள் தீர்வுகளை தேடும் தமிழர்களின் மற்றொரு முயற்சியாகும்.
முடிவு:
தமிழர்கள் அனுராவையோ அல்லது ஜேவிபியையோ நம்புவதற்கு முன், இந்தக் கோரிக்கைகள் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய அர்த்தமுள்ள விவாதங்கள் தொடங்கும் முன் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை. ஒரு மாதத்திற்குள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு புலம்பெயர் மக்கள் அனுரவைக் கேட்டுக்கொள்கின்றனர். உறுதியான நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் நீதி மற்றும் சமத்துவத்திற்கான உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும். ரஸ்யன் பழமொழி சொல்வது போல், “நம்புங்கள், ஆனால் உறுதிப்படுத்துங்கள்” (Trust, but verify) உடனடி, வெளிப்படையான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கை மூலம் மட்டுமே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். தமிழ் சமூகத்தின் நீண்டகால காயங்களை ஆற்றுவதற்கு இதுவே ஒரே வழி.

 

Thank you,
Tamil Diaspora News
December 5, 2024