1. இலங்கை வலுவான தேரவாத பௌத்த நாடாக மாற்றப்படும்: ரணில்
2. கோத்தபாய காட்டிக் கொடுத்துவிடுவார்! சவேந்திர சில்வா மீது கை வைக்கவிடமாட்டேன்: சஜித் சபதம்
இலங்கை வலுவான தேரவாத பௌத்த நாடாக மாற்றப்படும்: இலங்கையை வலுவான பொருளாதாரம் கொண்ட தேரவாத பௌத்த நாடாக மாற்ற போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் மற்றும் மலாபே ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாம் இங்கு வந்துள்ளோம். இது நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமை.
நாங்கள் பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்காக அதிகளவான வேலைகளை செய்துள்ளோம். “புதுபுத் சுரக்ஷ” என்ற காப்புறுத் திட்டத்தின் மூலம் பௌத்த பிக்குகளுக்கு காப்புறுதிகளை வழங்க அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அறநெறி பாடசாலைகளை மேம்படுத்த அறநெறி பாடசாலை கட்டிடங்களை நிர்மாணித்தோம். பிக்குமாரின் இருப்பிடங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். விகாரைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Link: https://www.tamilwin.com/politics/01/229339
தற்போதைய இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா மீது கை வைப்பதற்கு எவரும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
தற்போதைய இராணுவத் தளபதியை பணி நீக்க வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி சாவேந்திர சில்வா மீது கை வைக்க அனுமதிக்கப்படாது.
நான் ஓர் தூய இலங்கையன், எனக்கு வேறு நாடுகளில் குடியுரிமை கிடையாது. எனக்கு எதிராக போட்டியிடுபவர் இலங்கையின் முழு நேரப் பிரஜையா என்பதில் சந்தேகம் உண்டு.
கோத்தபாய கால்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வைத்திருக்கின்றார்.
கோத்தபாயவிடம் படைவீரர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினால் அவர் படைவீரர்களை காட்டிக் கொடுத்துவிடுவார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.