ஜிகாத்’ முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்த மறவா வடுக்கள்.

“ஜிகாத்’ முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்த மறவா வடுக்கள்.

திராய்க்கேணி படுகொலைகள் – 1990 ஆகஸ்ட் 6

1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று, இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திராய்க்கேணி தமிழ் கிராமத்தில், சிறப்பு அதிரடிப் படையினரின் (STF) உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் 47 தமிழர்களை படுகொலை செய்தனர்.

திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த படுகொலையில், கோயிலில் தஞ்சமடைந்திருந்தவர்கள் கொல்லப்பட்டனர். பல முதியவர்கள் வீடுகளுக்குள் உயிருடன் தீவைக்கப்பட்டனர். 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

13 வயது சரோஜா கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப்படுகொலை மதியம் வரை நீடித்தது. உயிர் தப்பிய மக்கள் காரைதீவு அகதி முகாமில் தங்கி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகளுக்கு நீதியை கோரிய திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி 1997ல் படுகொலை செய்யப்பட்டார்.

மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

2003 அக்டோபர் 12 அன்று, திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயிலின் அருகே, பொதுமக்கள் குழியொன்றில் மனித எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். ஆனால், இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

சத்துருக்கொண்டான் படுகொலை – 1990 செப்டம்பர் 9

198 தமிழர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

– 8 மாத குழந்தை விஜயகுமார்3 மாத குழந்தைகள் பிரியா, வேணுதாஸ் ஆகியோரை இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையும் வெட்டி, எரியும் நெருப்பில் போட்டனர்.

– 68 சிறுவர்கள்80 பெண்கள் கொல்லப்பட்டனர்.

– 25 வயதுடைய ஜீவமலர் என்பவரின் கையில் இருந்த 3 மாத குழந்தை பிரியாவை பறித்து வெட்டினர். பின்னர் அவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர்.

இவை அனைத்தும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து செய்த இனப்படுகொலைகள்.

வீரமுனை படுகொலைகள் – 1990

1990ஆம் ஆண்டு, அதிரடிப்படையினரும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் வீரமுனை தமிழ் கிராமத்தில் தொடர்ந்து பல படுகொலைகளை நிகழ்த்தினர்:

– 20.06.1990: பிள்ளையார் கோயிலில் 69 தமிழர்கள் படுகொலை.

– 05.07.1990: 13 தமிழர்கள் படுகொலை.

– 10.07.1990: 15 தமிழர்கள் படுகொலை.

– 16.07.1990: 30 பேர்8 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.

– 26.07.1990: 32 இளைஞர்கள் காணாமல் போனது.

– 29.07.1990: ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை.

– 01.08.1990: சவளக்கடையில் 18 பேர் காணாமல் போனது.

– 12.08.1990: அகதி முகாமில் 14 பேர் வெட்டிக்கொலை.

இரண்டு மாதங்களில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மறைந்துவிட்ட தமிழ் கிராமங்கள்

1990களில் நிகழ்ந்த இனப்படுகொலைகளால் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டன.

– அம்பாறை மாவட்டத்தில்: பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, கொண்டா வெட்டுவான், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம்.

– இப்பொழுது, இக்கிராமங்கள் முஸ்லிம் ஆக்கிரமிப்பில் உள்ளன.

அந்த கொடூர படுகொலைகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

தமிழர்கள் போராடிய வரலாற்றை மறக்காமல், நீதி பெறும் வரை இந்த குரல் மௌனமடையாது.

#தமிழர்மீதுஅடக்கமுடியாதஅடையாளங்கள்

இனநாச_நிகழ்வுகள்

நீதி_தேவை

Thank you,
Tamil Diaspora News
February 23, 2025