கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு வருடங்களாக தமக்கு வாக்களித்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவை…
| 1. | மணலாறு, வவுனியா, மட்டக்களப்பு ,நாவற்குழி, திருகோணமலை உட்பட்டபல பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் விஸ்தரிக்க பட்டு இருக்கிறது. 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது |
| 2. | நூற்றுக்கணக்கான விகாரைகள் (அண்ணளவாக 107) சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருக்கிறது |
| 3. | சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான தென்பகுதி சிங்களவர்கள் வடக்கு கிழக்கு அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் |
| 4. | இலங்கை கணக்காளர் சேவை , கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்ற போட்டி பரீட்சைகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் |
| 5. | சிறைகளில் தமிழர்கள் இன்றைக்குக்கும் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள் .இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் கைதிகளாக கூட ஏற்று கொள்ள மறுக்கிறது |
| 6. | காணமல் போனோர் உறவுகள் ஆண்டுக்கணக்கான வீதிகளில் நிற்கிறார்கள் |
| 7. | மகாவலி திணைக்களம் , வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என மத்திய அரச நிறுவனங்கள் போட்டி போட்டி தமிழர் நிலத்தை அபகரிக்கும் நிலை இருக்கிறது .விவசாய நிலங்கள் , மேய்ச்சல் தரைகள், வழிபாட்டு நிலங்கள் கூட பறிக்கப்பட்டு இருக்கிறது |
| 8. | வவுனியா வர்த்தக வலயத்தை கூட பெற்று கொடுக்க முடியவில்லை .கிளிநொச்சியில் சட்டவிரோதமாக தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு உப்பளங்களை அரசாங்கம் பெற்று கொடுக்கிறது |
| 9. | வடக்கில் எல்லா அரசாங்க பண்ணைகளும் இலங்கை ராணுவத்தின் பண்ணைகளாக இன்னும் இருக்கின்றன |
| 10. | சர்வதேச விசாரணையை நீர்த்து போக செய்து இருக்கிறது .போர்குற்றவாளிகளை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கிறது |
| 11. | வடக்கு கிழக்கை பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது வட மாகாணத்தின் வேலையின்மை வீதமானது 7.7 வீதமாக உள்ளது.எந்த நடவடிக்கையும் இல்லை |
| 12. | முல்லைத்தீவு ஒட்டு தொழில்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை என தொழில்துறையில் முழுமையாக இயக்கப்பட வேண்டிய /உருவாக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் எவையும் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்க படவில்லை .இவற்றை மீள் இயக்குவதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது |
| 13. | உலகப்பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்களுடைய கையில் தான் இருக்கின்றது.ஆனால் இந்த கடல்வளத்தை தென்னிலங்கை மீனவர்களுக்கு பெற்று கொடுக்கிறது அரசாங்கம் .நாயாறு ,சாலை உட்பட பலபகுதிகளில் கடல் அட்டை தொழில் முற்றுமுழுதாக தென்னிலங்கைக்கு பெற்று கொடுக்க பட்டு இருக்கிறது |
| 14. | 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வட மாகாணத்தில் வாழ்கின்றனர் .40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன.இதுவரை எந்த வாழ்வாதாரங்களும் பெற்று கொடுக்கப்படவில்லை |
| 15. | ஒருமித்த நாடு , பௌத்த முன்னுரிமை என அரசியல் யாப்பு ஆக்க விடயத்தில் பொய்களுக்கு மேலாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள் |
| 16. | கல்முனைக்கு கூட ஒரு கணக்காளரை நியமிக்க மறுத்து இருக்கிறார்கள் |
இப்போது சொல்லுங்கள் ? நம்ம பாராளமன்ற உறுப்பினர்களுக்கு பதவி ஏன் ?