தமிழரசுக்கட்சி சுமந்திரனையும், அடைக்கலநாதனையும் விலக்க வேண்டும்

தமிழரசுக்கட்சி சுமந்திரனையும், ரெலோ அடைக்கலநாதனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும்

Chelva-Protest-1

தந்தை செல்வா சத்தியாகிரகத்தில்

1960 களில் ஆண்டில் தமிழர்களின் தாயக பூமியை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டிருப்பதை தடுப்பதற்கு சமஷ்டி தீர்வினை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் தலைவர்கள்.

with GG Ponnambalam and Chelvanayagam 1124 tc

வட்டுக்கோடடை தீர்மானத்தில் மூன்று தமிழ் தலைவர்களும்

தந்தை செல்வா கிழக்கு மாகாணத்தினை சிங்களவர்கள் பறிப்பதனால் தான் கூட்டாட்சி என்ற அரசியல் தீர்வைக் (சமஷ்டி) கேட்டார். அவரின் 61 வருட போராட்டத்தில் கூட்டாட்சி கிடைக்கவில்லை என்பதால், தமிழீழம் தான் எம்மை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழவிடும் என்பதால், தமிழீழம் தான் எமது தேவை என்று ஜீ.ஜீ. பொன்னம்பலம், எம். திருச்செல்வம், தந்தை செல்வா எடுத்த முடிவான முடிவு.

UNPSumanthiran

சிங்கள ஐ. தே. கட்சியில் அங்கத்தவர் அட்டையை காவும் சுமந்திரன் கடந்த ஞாயிறு அன்று வவுனியாவில் தமிழ் கிராமத்தினை உத்தியோக பூர்வமாக சிங்களவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை கொடுக்கும் வைபவத்தில் செல்வம் அடைக்கலநாதனுடன் இருந்துகொண்டு ரணிலுக்கும் சிறிசேனாவுக்கும் கைதட்ட ஆதரித்துக் கொண்டிருந்தார்கள்.

தந்தை செல்வாவின் 61 வருட போராட்டத்தினை இழிவு படுத்தும் சுமந்திரனை கட்சியில் இருந்து விலக்க வேண்டும். அவரது எம். பி பதவியையும் பறிக்க வேண்டும்.

சுமந்திரன் தந்தை செல்வா மட்டுமல்ல, ஏனைய கடந்த கால தமிழ்த் தலைவர்களயும் ஏன் தமிழ் மக்களையும் முட்டாள்கள் என்று நினைப்பவர்.

இவர் தமிழ் அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர். இவர் ஐ.தே. கட்சிக்காரன், ஏமாற்றுப் பேர் வழி, பல பொய்கள் கூறுபவர், ஒரு சிங்கள கூலி, சிங்கள நபர்.

Ananthi Sivakaran

தமிழரசுக்கட்சி தமது கட்சி கொள்கைகளை மீறியதாக அனந்தி மற்றும் சிவகரன் ஆகியயோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் இருந்து நீக்கி தண்டனை கொடுத்தது போல ஏன் சுமந்திரனை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க கூடாது.

selvam-adaikalanathan

செல்வம் அடைக்கலநாதன், தமிழ் இனத்துக்கு ஒரு கேடு. இவர் ஒரு அரசியல் தெரியாத ஒரு மனித பிராணி. சிங்களத்தினை குறை கூறி கதைத்தால் பிரதி தவிசாளர் பதவி பறி போய்விடும் என்ற பயம் கொண்டவர்.

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்த குட்டிமணி, தங்கத்துரை போன்ற முன்னணித் தலைவர்கள் இருந்த ரெலோவிற்கு செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களால் அவமானமே. ரெலோ தமிழ் அரசியலில் தொடர்ந்து ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்றால், செல்வம் அடைக்கலநாதனை கட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

இந்த இரண்டு கட்சிகளும் ஒரு முடிவு எடுக்காமல் இருந்தால் தமிழ் மக்கள் தான் இவர்களை ராஜினாமா பண்ணும்படி ஆர்ப்பாட்டங்களை தொடங்க வேண்டும்.

நன்றி
புவி, அளவெட்டி நிருபர்
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்.
October 25, 2017

தந்தை செல்வாவின் 61 வருட போராட்டத்தினை இழிவு படுத்தும் சுமந்திரனை கட்சியில் இருந்து விலக்க வேண்டும். அவரது எம். பி பதவியையும் பறிக்க வேண்டும்.

சுமந்திரன் தந்தை செல்வா மட்டுமல்ல, ஏனைய கடந்த கால தமிழ்த் தலைவர்களயும் ஏன் தமிழ் மக்களையும் முட்டாள்கள் என்று நினைப்பவர்.

இவர் தமிழ் அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர். இவர் ஐ.தே. கட்சிக்காரன், ஏமாற்றுப் பேர் வழி, பல பொய்கள் கூறுபவர், ஒரு சிங்கள கூலி, சிங்கள நபர்.

About Tamil Diaspora News.com 557 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.