இது தமிழ் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம் முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் ஒரு இணைப்பை அல்லது கூட் டணியை உருவாக்க வேண்டும். சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல் வாதிகள் , தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் , சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெற வேண்டும். நமது அரசியல் தீர்வு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா மட்டும்தான் தீர்வு காண முடியும் என்று நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேர வேண்டும். இந்த இணைப்பு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை சந்திக்கும் போது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இணக்க அரசியலில் ஈடு படக்கூடாது. கடந்த 10 ஆண்டு இணக்க அரசியல் போதும். பல ஆண்டுகளாக இருந்த எம்.பிக்கள் (குறைந்தது இரண்டு முறை- 10 வருடங்கள்) ஓய்வு பெற வேண்டும். இவர்கள் “ருசி கண்ட பூனைகள்.” சிங்களத் தலைவர்களிடம் எப்படி தம்மை விற்பதும் தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்பதனையும் நன்றாக தெரிந்தவர்கள். இவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரமிது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் நாம் இந்த அணியை அல்லது கூட் டணியை அமைக்க வேண்டும். விக்னேஸ்வரன் தயங்கினால். திரு மணிவண்ணனை போன்ற இளைஞர்களை நாம் வரவேற்க வேண்டும். சரியான நேரத்திற்காக காத்திருக்காமல், உடனடியாக இந்த முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். சுமந்திரனும் சம்பந்தனும் இந்த புதிய அரசியல் அமைப்பை நிறுத்த ஒரு திட்டம் வைத்திருக்கலாம். அவர்கள் கடைசி நிமிடம் வரை விளையாடுவார்கள். கடைசி நிமிடத்தில் அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட அனைவரையும் ஏமாற்றுவார்கள். இந்த புதிய தலைமை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் பேசுவதற்கு தயங்கக்கூடாது. இந்த புதிய தலைவர்கள் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா நாடுகளை நாடி உடனடியாக தமிழ் தீர்வை பற்றி கதைக்கவேண்டும். காலம் கடந்தால் இது நடக்காது. புதிய கூடடணி அல்லது இணைப்பும் புதிய தலைமைகளும் பின்வருபவவற்றை ஆதரிக்க வேண்டும்:
தமிழர்களின் இறுதி அரசியல் தீர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த புதிய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வல்லுநர்களிடமிருந்து அறிவுரைகளை பெற வேண்டும். பல சுயாதீனமாக பிரிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிய வல்லுநர்களிடமிருந்து அறிவுரைகள் பெறுவதற்கும், சந்திப்புகளை ஏற்படுத்தவும், கூட்டங்களை உண்டு பண்ணவும் அமெரிக்கா மற்றும் ஏனைய தமிழ் புலம்பெயர்ந்தோரால் ஏற்பாடு செய்யப்படும். புலம் பெயர் தமிழர்களின் செய்திகள் |
Be the first to comment