இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படா விட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடு வேன் என்று கூறிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இப்போது கூறுவது?
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு ஒருமித்து எடுத்த தீர்மானத்தால் முஸ்லிம் களுக்கு எதிராகக் கோசம் போட்ட சிங்களப் பேரினவாதம் அடங்கிப் போயுள்ளது.
தவிர, பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளைப் பொறுப் பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை பெளத்த பீடங்கள் விடுத்த வண்ணமுள்ளன.
இதற்கு மேலாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் உச்சமடைந்தால் அது முஸ்லிம் இனத்துக்குக் கேடாகிவிடும் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்ட முஸ்லிம் சமூகம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து தங்களின் எதிர்காலத்தை ஆரோக்கியமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இவை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
எங்கள் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஏமாற்று அரசியல் நடத்து வதிலேயே தமது முழுப்பலத்தையும் செலவிடுகின்றனர்.
அரசாங்கத்துக்கான தமது ஆதரவை வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றவே அரசுக்கான தங்களின் ஆதரவு தொடர் வதாகக் கூட்டமைப்புக் கூறிவந்தது.
ஆனால் இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு என்னவாயிற்று என்றே தெரிய வில்லை.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றி இலங்கை அரசு எதுவும் பேசுவதில்லை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது பற்றி மறந்து விட்டது போல நடந்து கொள்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவ காசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பு; ஐ.நா மனித உரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றுகிறா? என்பதைக் கவனிப்பதும் அது தொடர்பான நிலைமைகளை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்கையில், இப் போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை வென் றெடுக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன செய்வது பிரதமர் ரணிலின் அரசுக்கு ஆதரவு காட்டி வந்த கூட்டமைப்பு இப் போது ஏமாற்றப்பட்டுவிட்டது.
தவிர, தேர்தலும் வருகின்ற நேரமாகி விட்டதால் இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்தி யாவின் பக்கம் திசை திருப்பி மீண்டுமொரு காலக் கடத்தலுக்கு வழி வகுக்கிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படா விட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடு வேன் என்று கூறிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் இப்போது கூறுவது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுகின்ற துணிவு பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இல்லை என்பதாகும்.
இந்நிலையில்தான் சம்பந்தர் ஐயா இனப் பிரச்சினைக்கான தீர்வை இந்தியாவின் பக்க மாகத் திசை திருப்பியுள்ளார்.
Link: http://www.valampurii.lk/valampurii/content.php?id=18757&ctype=news