|
பல ஆண்டுகளாக சிங்களவர்கள் தமிழரிடம் (தமிழரின் சரணடைதல்) இருந்து எதிர் பார்த்ததை, சுமந்திரன் சிங்களவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார் . புத்த மதத்திற்கு மிக முதல் இடம், வடகிழக்கு பிரிப்பு மற்றும் ஒற்றையாட்சி. தந்தை செல்வா மற்றும் பிற தலைவர்கள் நிராகரித்த மூன்று விஷயங்கள் இவை. சுமந்திரன், தமிழரின் விடிவு போராட்டத்தை நிறுத்த எடுக்கும் சூழ்ச்சி. வேறுவிதமாகக் கூறினால் இது சிங்களவர்களுக்கு தான் தீர்வு . தமிழர்களுக்கு இல்லை. இம்மாதம் TNA இல் நடந்த கூட்டத்தில், சுமந்திரன் மற்றும் திரு. சயந்தன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளை அவ்வப்போது கெட்ட வழியில் கண்டனம் செய்தனர். திரு சார்லஸ் நிர்மல்நாதன் பின்வருமாறு கூறினார் : “இதுபோன்ற கருத்துக்களை திரும்பத் திரும்ப கூறுவீர்களாயின் கட்சியை விட்டு விலகப் போவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் அங்கு தெரிவித்ததாக தெரிகிறது” திரு சார்லஸ் நிர்மலாநாதனுக்கு முதுகெலும்பு இருந்திருந்தால் இந்த சிங்கள ஏஜென்ட் சுமந்திரனை கட்சியை விட்டு விலக சொல்லி கூறியிருக்க வேண்டும். பதிலாக, தான் விலக்கப்போவதாக சொல்லுவது இவருக்கு முதுகெலும்பு இல்லை என்பதை காட்டுகின்றது. இங்கே, இது குறிப்பிடத்தக்கது என்னவெனில் . 2015 தேர்தலில் வெற்றிபெற தமிழ்ப் புலிகளின் வீரத்தை மெச்சி, தமிழ் புலிகளை புகழ்ந்து, அவர்களின் உணர்ச்சிப் பாடல்களை சத்தமாக ஒளி பெருக்கி தமிழர்களின் மனத்தை கவர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 2015 தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அனைத்து த.தே.கூ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டிணைந்து தமிழ் அன்னியன் சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். ஆதார இணைப்பு: https://www.tamilwin.com/politics/01/204169 |
