கொரோனோவைரஸ் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் ஒரு தமிழ் மருத்துவரிடமிருந்து பயனுள்ள தகவல்.

டாக்டர் செல்வராணி பத்மபாஸ்கரன், லண்டன் எப்சம் பொது மருத்துவமனை வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணராக (Anesthesiologist) பணியாற்றுகின்றார். ஆனால் அவர் தற்போது மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாது அதி தீவிர சிகிட்சை பிரிவிலும் கடமையாற்றிவருகின்றார்.

கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள சில அறிவுரைகளை தமிழ் மக்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ கொரோனா வைரஸ் எங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. வைரசினால் தாக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இந்த வைரஸ் முக்கியமாக நுரையீரலைத் தாக்க முயல்கிறது.

நுரையீரலைத் தாக்கும் பொழுது எங்களுடைய மூச்சின் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதற்கு காரணம் முக்கியமாக இந்த வைரஸ் நமது நுரையீரலின் வெளிப்பாகங்களை அதாவது உள்ளே சென்று அதன் கரைப் பக்கங்களை முக்கியமாக தாக்குகின்றது.

எனவே இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தடுக்கும் முறையாக ஒரு சில முறைகளை கையாள்வது நல்ல பலனை கொடுக்கும்.

01. நீராவியில் நீண்ட மூச்செடுத்து மூச்செடுத்து ஆவி பிடிப்பதால் இந்த வைரஸ் தாக்கத்தை உங்களால் குறைக்க முடியும். இந்த நீராவிக்கான நீரின் கொதிநிலையானது 60 டிகிரிக்கும் மேல் இருக்கவேண்டும். அந்த கொதிநிலையில் இந்த வைரஸ் உயிரோடு இருக்காது. அத்துடன் மூச்சு துவாரங்கள் வாயினால் நீராவியை எடுக்கும்போது அதில் ஒளிந்திருக்கும் வைரசையும் அழிக்க முடியும்.

02. யோகா பயிற்சி செய்பவர்கள் உங்களது மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் இப்படியான வைரஸின் தாக்கத்தை குறைக்க முடியும்.

இதையும் மீறி இந்த வைரஸ் உங்களை தாக்கினால் அதற்கு செய்ய வேண்டிய மருத்துவ முறைகள் பின்வருமாறு:

01. கொதிக்கும் தேனீர்கள் அடிக்கடி குடிக்க வேண்டும்.

02. குப்புற படுக்க வைப்பதன் மூலம் நுரையீரலின் தாக்கத்தைக் குறைக்க முடியும். அப்படி குப்புற படுப்பது சிரமாக இருந்தால் இரண்டு தலையணைகளை வயிற்றில் வைத்து முகத்தை ஒரு பக்கம் திருப்பி நீண்ட மூச்சு எடுப்பதால் இந்த வைரசின் தாக்கத்தை குறைக்க முடியும்.

அதி தீவிர சிகிற்சையில் இருக்கும் நோயாளிகளின் ஆக்சிசன் குறையும் கட்டத்தில் நாங்கள் அவர்களை குப்புற படுக்கவைத்து சில முன்னேற்றங்களை காண்கிறோம்.

அத்துடன் கொரோனா வைரஸ் உள்ளாகியவர்களின் நோயின் தாக்கம் இருதயத்தையும் சிறுநீரகத்தையும் தாக்கி வருகிறது. இது மிகுந்த சவாலை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் பயனுள்ள தகவலுக்கு டாக்டர் செல்வரனி பத்மபாஸ்கரனுக்கு நன்றி,

புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.