உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நாம், இன்று வேதனை, பெருமை மற்றும் நம்பிக்கையுடன் பேசுகிறோம்.
நாம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள்.
சங்க காலம் தொடக்கம் தமிழர்கள் கடல்களை ஆண்ட காலம்.
ஆசிய நாடுகளுடன் உறவுகள் அமைத்து, அறிவையும் கலாச்சாரத்தையும் பரப்பியவர்கள்.
வானியல், பஞ்சாங்கம், இலக்கியம் — இவற்றை உலகிற்கு அளித்த மக்களே நாம்.
ஆனால் இன்று ஒரு கேள்வி நம்மை வாட்டுகிறது:
நம் மொழியும் கலாச்சாரமும் இல்லையெனில், நாம் யார்?
ஆனால் இன்று, தமிழ் மொழி, கலாச்சாரம், மற்றும் நிலத்தோற்ற அடையாளம் பல்வேறு அழுத்தங்களால் அச்சுறுத்தப்படுகின்றன. 2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவுகள் இன்னும் தமிழர் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளன. அப்போது உலகமும் பல அரசியல் சக்திகளும் நீதிக்குப் பதிலாக அநீதி பக்கமே நின்றன.
ஈழப்போரினால் அகதிகளாக்கப்பட்டு இந்தியா சென்ற ஆயிரக்கணக்கான தமிழர்கள், பல தசாப்தங்களாக தமிழக அகதிமுகாம்களில் இன்றும் போதிய அடிப்படை வசதிகளற்று, துன்பத்துடன், எதிர்காலம் பற்றிய எந்தத் தீர்வும் இல்லாமல் வாழ்கின்றனர். இந்த மனிதாபிமான பிரச்சினைக்கு இதுவரை தெளிவான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
ஒரு காலத்தில் MGR, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தமிழர்களுக்காக வலுவாக பேசுபவர்களாக இருந்தனர். இன்று அந்த குரல் மங்கிவிட்டது.
பெரிய அரசியல் கட்சிகள் தமிழர்களை ஏமாற்றியுள்ளன:
தமிழீழத்தில் 2009 ஆண்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு, அன்று இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் உடந்தையாக இருந்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க அரசானது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோதும் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க தவறியது. இன்றும் அதே கூட்டணியே தொடர்கின்றது.
இன்று இந்தியாவை ஆழும் பா.ஜ.க அரசு 15ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்ற போதிலும், ஈழத்தில் 80 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா மறைவுக்கு பின் அ-தி-மு-க அரசும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்திருந்த போதிலும், இனப்படுகொலையை தடுக்கவில்லை. தற்போதும் அந்த கூட்டணியே தொடர்கின்றது
தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜையின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், அது இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவே இறுதிவரை முயற்சி செய்துகொண்டிருந்தது.
நடிகர் விஜைக்கு ராஜபக்சாவின் மகன் நாமல் ராஜபக்ஷவிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்திருந்தது என்பவும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்கில ஊடகமொன்றுக்கு நாமல் வளங்கிய செவ்வியில்….
இந்த காலகட்டத்தில், இன்று தமிழர்கள் நம்பிக்கை வைக்கும் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கின்றது. அவர்கள் ஆரம்பம் முதல் இன்று வரை எந்த விட்டுக்கொடுப்பும் வைத்துக்கொள்ளாமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து தேர்தலை சந்திக்கின்றார்கள். தமிழர் அடையாளம், மொழி, மரியாதை மற்றும் அகதிகளின் எதிர்காலத்திற்காக நேரடியாக குரல் கொடுக்கும் கட்சியாக இது இருக்கின்றது.
இந்தத் தேர்தல் சாதாரண அரசியல் அல்ல. இது தமிழர் வாழ்வாதாரப் போராட்டம்.
ஈழத்திலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாகிய நாம், தமிழ்நாட்டு மக்களிடம் உரிமையுடனும், உணர்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறோம்:
மொழியும் பண்பும் இல்லையெனில் தமிழர் அடையாளமே இல்லை. இந்தத் தேர்தல் நம் பாரம்பரியத்தை காப்பதற்கும், மறக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்குமானது.
தமிழகம் மற்றும் ஈழம் —
ஒரே வரலாறு, ஒரே மக்கள், ஒரே எதிர்காலம்.
தமிழகம் மற்றும் தமிழீழம் இடையிலான வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த அழைப்பு வலியுறுத்துகிறது.
இந்தத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையட்டும். “சோழன், சேரன், பாண்டியன், எல்லாளன், சங்கிலியன், மற்றும் பண்டார வன்னியன் ஆகியோரின் வரலாற்றை மரியாதையுடன் நினைவுகூர்ந்து, ஒரு சிறந்த தமிழ் எதிர்காலத்திற்காக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.