This is the Time for Tamils Need to be United / இது தமிழ் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம்

இது தமிழ் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம்

முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் ஒரு இணைப்பை அல்லது கூட் டணியை உருவாக்க வேண்டும்.

சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல் வாதிகள் , தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் , சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெற வேண்டும்.

நமது அரசியல் தீர்வு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா மட்டும்தான் தீர்வு காண முடியும் என்று நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேர வேண்டும்.

இந்த இணைப்பு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், அவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை சந்திக்கும் போது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

இணக்க அரசியலில் ஈடு படக்கூடாது. கடந்த 10 ஆண்டு இணக்க அரசியல் போதும்.

பல ஆண்டுகளாக இருந்த எம்.பிக்கள் (குறைந்தது இரண்டு முறை- 10 வருடங்கள்) ஓய்வு பெற வேண்டும். இவர்கள் “ருசி கண்ட பூனைகள்.” சிங்களத் தலைவர்களிடம் எப்படி தம்மை விற்பதும் தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்பதனையும் நன்றாக தெரிந்தவர்கள். இவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரமிது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் நாம் இந்த அணியை அல்லது கூட் டணியை அமைக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் தயங்கினால். திரு மணிவண்ணனை போன்ற இளைஞர்களை நாம் வரவேற்க வேண்டும்.

சரியான நேரத்திற்காக காத்திருக்காமல், உடனடியாக இந்த முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். சுமந்திரனும் சம்பந்தனும் இந்த புதிய அரசியல் அமைப்பை நிறுத்த ஒரு திட்டம் வைத்திருக்கலாம். அவர்கள் கடைசி நிமிடம் வரை விளையாடுவார்கள். கடைசி நிமிடத்தில் அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட அனைவரையும் ஏமாற்றுவார்கள்.

இந்த புதிய தலைமை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் பேசுவதற்கு தயங்கக்கூடாது.

இந்த புதிய தலைவர்கள் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா நாடுகளை நாடி உடனடியாக தமிழ் தீர்வை பற்றி கதைக்கவேண்டும். காலம் கடந்தால் இது நடக்காது.

புதிய கூடடணி அல்லது இணைப்பும் புதிய தலைமைகளும் பின்வருபவவற்றை ஆதரிக்க வேண்டும்:

1. தமிழீழத்தை விட்டு கொடுக்க மாட்டோம், ஆனால் பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகம் என்று ஒரு மாற்று (Alternative Political Solution) தீர்வு என்றால் நாங்கள் பரிசீலிப்போம் .
2. சர்வசன வாக்கெட்டுப்பு – தமிழீழம் பற்றிய சர்வசன வாக்கெட்டுப்பு, இது ஒரு ஜனநாயக நடைமுறை. ஜனநாயக முறையில் ஒரு அரசியல் தீர்வை நாம் காண விரும்புகிறோம்.
3. வட-கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வை அனுமதியோம் என்பதை வலியுறுத்துவோம். வட -கிழக்கு, தமிழரின் பழைய, பாரம்பரிய மற்றும் நீண்ட காலமாக வாழும் வசிப்பிடமாக உள்ளது. நாம் ஒருபோதும் வட -கிழக்கு இணைப்பை கைவிடமாட்டோம்
4. தமிழர்கள் இன அழிப்பு கொலைக்கு நீதியும், நிரந்தரமாக பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தில் சுதந்திரமாகவும் , பாதுகாக்கப்பட்டதுமான தீர்வையும் விட்டுக்கொடோம்.
5. போஸ்னிய பாணி கூட்டாட்சியை – நாம் ஒரு அரசியல் தீர்வாக போஸ்னியன் பாணி கூட்டாட்சியையும் நிச்சயமாக பரிசீலிப்போம். ஏனெனில் இதில் 100 வீதமும் தமிழர் மட்டும் உள்ள மாநில சுய ஆட்சி இன அழிப்பை இல்லாமல் செய்யும்.
6. சர்வதேச விசாரணை- நாம் சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை தண்டிப்பதற்கு சர்வதேச விசாரணை, ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டோம். சிங்கள இராணுவம் மற்றும் அவர்களின் மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு தளபதிகள் தண்டிக்கப்படுதல் எமது தேவை. இதுவே தமிழர்களின் மன, நீண்ட கால அமைதிக்கு தேவையானது.
7. உடனடியாக சிங்கள இராணுவம் தமிழ் தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதை நாம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா ஆகியவற்றிடம் வேண்டுவோம்.
.
8. தென் சூடான், கொசோவா, போஸ்னியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிற சக்திகளால் வழங்கப்பட்ட அல்லது ஒப்புதல் அளித்த கடந்த அரசியல் தீர்வைப் தமிழருக்கு கொடுப்பதற்கு அமெரிக்காவுக்கு ஆதாரங்களை கொடுத்து, உறுதியான விரிவுரைகளும் கொடுப்போம்.
9. சிங்கள மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எழுதிய எந்தவொரு புதிய அரசியலமைப்பையும் நாம் ஒருபோதும் கருத்தில் கொள்ள மாட்டோம், தமிழ் மக்களைப் போலவே துன்பங்களை அனுபவித்து வந்து தீர்வு பெற்ற மக்கள் வாழும் புதிய நாடுகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பை மட்டுமே நாம் ஏற்று கொள்வோம்.

தமிழர்களின் இறுதி அரசியல் தீர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த புதிய தலைவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வல்லுநர்களிடமிருந்து அறிவுரைகளை பெற வேண்டும்.

பல சுயாதீனமாக பிரிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிய வல்லுநர்களிடமிருந்து அறிவுரைகள் பெறுவதற்கும், சந்திப்புகளை ஏற்படுத்தவும், கூட்டங்களை உண்டு பண்ணவும் அமெரிக்கா மற்றும் ஏனைய தமிழ் புலம்பெயர்ந்தோரால் ஏற்பாடு செய்யப்படும்.

புலம் பெயர் தமிழர்களின் செய்திகள்

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்