தமிழர்கள் மீதான பகைமையை தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார் சஜித்: பிரபா கணேசன்

“சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் ரிஷாட் பதியுதீனுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தால், மன்னார் மாவட்டத்தை எவ்வாறு ரிஷாட் பதியுதீன் ஆக்கிரமித்துள்ளாரோ, அவ்வாறே அவர் முல்லைத்தீவு மாவடத்தையும் ஆக்கிரமிப்பார்.”- பிரபா கணேசன்

Link: https://www.tamilwin.com/politics/01/230905

2

1

தமிழர்கள் மீதான பகைமையை தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார் சஜித்: பிரபா கணேசன்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு போடப்படுகின்ற வாக்குகள் அனைத்தும், ரிஷாட் பதியுதீனுக்கு போடப்படுகின்ற வாக்குகளாகும். அத்தோடு சஜித் பிரேமதாச தமிழர்கள் மீதான 26 வருட பகையைப் பழி தீர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற பொதுஜனபெரமுனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இராணுவம் காணிகளை விடுவிக்கவில்லை என ரிஷாட் பதியுதீன் கூறுகின்றார். ஆனால் மன்னாரில் அவர் ஏராளமான காணிகளை அபகரித்து வைத்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் ரிஷாட் பதியுதீனுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தால், மன்னார் மாவட்டத்தை எவ்வாறு ரிஷாட் பதியுதீன் ஆக்கிரமித்துள்ளாரோ, அவ்வாறே அவர் முல்லைத்தீவு மாவடத்தையும் ஆக்கிரமிப்பார்.

அது மட்டுமல்ல ரிஷாட் பதியுதீன் தீவிரவாதசெயற்பாட்டையும் முன்னெடுப்பார். கடந்த காலங்களில் தேவாலயங்கள்மீது எவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோ அவ்வாறு, கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் குண்டுகள் வெடிக்கும்.

எனவே கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி இந்த நாட்டினை அபிவிருத்தியின் வழியில் இட்டுச்செல்லுங்கள்.

கோத்தபாய ராஜபக்ச சிங்கள மக்களுடைய வாக்குகளை மாத்திரம் பெற்று, அவரால் வெற்றியீட்ட முடியும். எனினும் அந்த வெற்றியில் தமிழ் மக்களுடைய வாக்குகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாமும் அந்த அபிவிருத்தி பயணத்தில் இணைந்து பயணிக்கமுடியும்.

சஜித் பிரேமதாசவை யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டிலில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் அது குதிரை அல்ல, அது கோவறுகழுதை, உண்மையில் சஜித் பிரேமதாச கோவறுகழுதையில் செல்வதற்குத்தான் தகுதியானவர்.

மேலும் சஜித் பிரேமதாச தமிழர்கள் மீதான 26வருட பகையை பழிதீர்த்துக்கொள்வதற்கு திட்டம் தீட்டுகின்றார். எனவே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.