விக்னேஸ்வரனும் கஜனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள். எமது பிரச்சினை அவர்களின் சொந்த கௌரவ பிரச்சினை அல்ல. இது ஒரு தமிழர்களின் பிரச்சினை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மை ஏமாற்றி , எங்கள் நம்பிக்கையையும், வாக்குறுதியையும் உதறி எம்மை காட்டிக் கொடுத்தது . எங்களுக்கு அதே துரோகத்தை விக்னேஸ்வரனும் கஜனும் செய்ய கூடாது.
இந்த இரு தலைவர்களும் அரசியல் தீர்வுக்காக அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மத்தியஸ்தம் கேட்க வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் . தமிழ் தாயகத்திற்கு சீனப் படையெடுப்பைத் தடுக்க எங்கள் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் உதவி கோர வேண்டும் என்றும் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.
நாம் அனைவரும் விக்னேஸ்வரன் மற்றும் கஜனுடன் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம். தயவுசெய்து ஒன்றுபட்டு அமெரிக்கா மற்றும் இந்தியா உதவியுடன் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தைக் எடுத்து தாருங்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே இனப் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை வரலாறு காட்டுகிறது. கொசோவா, தெற்கு சூடான், கிழக்கு திமோர், போஸ்னியா ஆகியவை இதற்கு உதாரணங்களாகும், மேலும் சில நாடுகளைச் சேர்க்கலாம்.
நீங்கள் அனைவரும் ஐ.நா பற்றி பேசுகிறீர்கள். அமெரிக்கா இல்லாமல் ஐ.நா ஒரு அங்குலம் கூட நகராது.
அமெரிக்காவால் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட இலங்கை போர்க்குற்ற தீர்மானம் நினைவில் கொள்ளுங்கள்.
இலங்கை இனப்படுகொலை நடவடிக்கையிலிருந்து விடுபட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை நீங்கள் உதவிக்கு அழைக்கவில்லை என்றால், நீங்கள் தமிழர்களை முட்டாளாக்குகிறீர்கள்
அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் உதவி கேட்டபதர்ற்கு சிங்களத்திற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தமிழ் அரசியலைச் சேர்ந்தவர்கள் அல்ல. இயலாவிடின் அரசியலுக்கு வரவேண்டாம்.
சமஷ்டி ஒருபோதும் இரு இனம் உள்ள நாட்டில் வேலை செய்யாது., சிங்களவர்களால் சமஷ்டியை 2/3 பெரும்பான்மையுடன் எந்த நேரத்திலும் இல்லாதொழிக்க முடியும்.
“ஒரு நாடு, இரண்டு தேசம்” இதுவும் இன்னும் ஒரு ஒற்றையாட்சி நாட்டுக்குள் தான். இதுவும் ஒரு சமஷ்டி தான்.
எனவே “பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தை” கேளுங்கள்.
பாராளுமன்றத்தில் உரைகள் ஒருபோதும் தமிழர்களுக்கு சேவை செய்யாது.
எங்களை வழிநடத்த தைரியமும் அறிவாற்றலும் கொண்ட தலைவர்கள் எமக்கு தேவை.
உங்கள் தேசிய உணர்வை காட்டும்படி நாங்கள் கேட்கும் கடைசி நேரமாக இது இருக்கலாம்.