நத்தார் தினத்தன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் சொல்லப்பட்ட செய்தி

கோ.ராஜ்குமார், செயலாளர்:
தமிழீழம், தமிழகம், சிறீலங்கா கடந்து உலகம் எங்கும் பரந்துபட்டு வாழும் சகல இன கிறிஸ்தவர்களுக்கும் எங்கள் நத்தார் தின வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நத்தார் பண்டிகைக்கு அண்மித்த இந்தப் புனித நேரத்தில் நமது தமிழ் மக்களுக்கு, முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அமைதி மற்றும் வளமான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகிறோம்.

எங்கள் சர்வ வல்லமையுள்ள இறை தூதர் இயேசு பிரான், சிறீலங்கா அரசால் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளையும், கடத்தப்பட்ட ஒப்படைக்கப்பட்ட ஏனைய பிரஜைகளையும் அழைத்து வர நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

எங்கள் கடந்த கால அநுபவத்திலிருந்து நாங்கள் கூறுவது, கடந்த 7 – 8 தசாப்தங்களாக எங்கள் அரசியல் தீர்வுக்காக கொழும்பை நம்புவதும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருவார்கள் என்பதெல்லாம் பயனற்றவை. இது எங்கள் அனுபவம் கூறுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியலையும் சில சொந்தங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கொழும்பை நம்புகிறார்கள். இதன் பொருள், கொழும்பு அரசை உதட்டு ஆலாபனைகளால் மனம் குளிரச் செய்வதன் மூலமாக அவர்கள் கொழும்பு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறுகிறார்கள் என்பதாகும்.

இந்த மக்கள் சலுகைகளுக்கு தங்களை விற்கிறார்கள். அரசியல் ஏற்பாடுகளுக்காக 70 ஆண்டுகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக 10 ஆண்டுகளும் காத்திருப்பது என்பதை யோசனை செய்து தான் பாருங்கள். இது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதாகும்.

எந்தவொரு தமிழர்களும் சிங்கள அரசாங்கத்தை, எந்தவொரு அரசியல் தீர்மானத்திற்கும் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதற்கும் நம்பக்கூடாது என்று நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

உலகின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் உதாரணங்களையும், இறுதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஈடுபாட்டையும் பின்பற்றுவதே எமக்கு இப்போதுள்ள ஒரே வழி. ஏனைய நாடுகளில் இனப்படுகொலை மற்றும் இனத்துவேசங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுதந்திரமாக இருக்கின்றனர். மற்றும் அவர்களின் முன்னாள் அடக்குமுறை எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டுள்ளனர்.

கிழக்கு திமோர், தெற்கு சூடான், போஸ்னியா, கொசோவோ போன்ற நாடுகளை மேல் கூறிய உதாரணங்களுக்கு நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை கட்டாயப்படுத்தும் இந்திய முயற்சியையும் நாங்கள் வரவேற்க விரும்புகிறோம். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சுய ஆட்சி மற்றும் நிரந்தர பாதுகாப்பு கேட்கும் இந்தியாவின் அரசியல் தீர்வு, இது வரவேற்கத்தக்க செய்தி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடெல்லிக்குச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் இந்த நடவடிக்கை கொழும்பு அரசின் பார்வையை சேதப்படுத்தும் என்றும், சங்கடங்களை கொடுக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கூட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் ஏறத்தாள 2 வருடங்களுக்கு முன்னர் கூறினார். தமிழர்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக, இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான உதவியும் கேட்க விரும்பவில்லை.

இந்தியா தனது இந்தோ பசுபிக் பிராந்திய சூழல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர்களின் மேல் உள்ள அனுதாபத்திற்காக தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

ஆகவே எமக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பங்கேற்பு எமக்கு மிகமிக அவசியம். இது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இவர்களைச் சந்திக்கும் போது நேரிலும், கோரிக்கை கடிதங்கள் மூலமும் எமக்கு உதவும் படி கேட்க வேண்டும். கேட்டால் தான் எமக்கு உதவுவார்கள்.

கிறிஸ்து பிறப்பு இன்றைய புனித நாளில் நான் எனது சிறிய கூற்றை முடிக்கும் முன்னர், ஒன்றைச் சொல்லி வைக்க வேண்டும். இறை தூதர் இயேசு பிரானைப் போலவே, நாங்களும் இன்று சிலுவைப் பாரம் சுமந்து நிற்கிறோம். இரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் ஒரு மீட்பர் கிடைக்க மாட்டாரா? என்று இப்போதும் கூட ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் இனம் நாங்கள். ஆயினும் எமது மனம் நிறைந்த நத்தார் தின கிறிஸ்மஸ் வாழ்த்துகளை சகல இன கிறிஸ்தவ மக்களுக்கும் தெரிவிக்கிறோம்.

2020 ஆம் ஆண்டில், அனைத்து தாய்மார்களும், தந்தையர்களும் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளையும், அன்புக்குரியவர்களையும் கண்டுபிடிக்கவும் , தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஐ.நா. உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு காலம் கனிந்து வரவும் பிரார்த்தனை செய்கிறோம்.

நன்றி
கோ.ராஜ்குமார், செயலாளர்,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம்.

காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் நாங்கள். எங்களில் சிலர் தங்கள் பெற்றோரை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே பார்த்திருக்கிறார்கள். சிலருக்கு தங்கள் பெற்றோர் நினைவில் கூட இல்லை.

எம்மில் அதிகம் பேர் அனாதைகளைப் போல வாழ்கிறோம்.

நாங்கள் எங்கள் பெற்றோரைப் பார்க்க விரும்புகிறோம். எங்கள் பெற்றோரைப் பற்றி நினைக்கும் போது எங்களுக்கு அது ஒரு கனவாக இருக்கிறது. சில நேரங்களில் நாம் பயம், பதட்டத்துக்கு உள்ளாகிறோம். கவலையோடு பொழுதைக் கழிக்கிறோம்.

இந்த உலகில் நாம், மற்ற நண்பர்களைப் போல வாழ முடியாது உள்ளது. நம் நண்பர்களை அவர்களின் பெற்றோருடன் தினமும் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் வழி காட்டுதலையும் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள்.

நாங்கள் அதை எம் வாழ்வில் காணவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருப்பதை நாங்கள் அறிவோம். சில வலுவான நாடுகள் வந்து சிறீலங்கா அரசின் இரகசிய சித்திரவதை கூடங்களில் இருந்து அவர்களை விடுவித்து தர வேண்டும்.

இயேசுநாதர் எமக்கு உதவுவார் என்று நம்முடைய கிறிஸ்தவ நண்பர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். எனவே, நத்தார் தினத்தன்று நாங்கள் எங்கள் பெற்றோருக்காக ஜெபிக்கிறோம்.

எனவே தயவுசெய்து, எங்கள் பெற்றோருக்காக ஜெபிக்குமாறு பெரியவர்களிடம் கேட்கிறோம்.

10 வயதிற்குட்பட்ட எங்கள் சகோதர சகோதரிகள் கூட இராணுவத்தால் சந்தேகம் தெரிவித்து விசாரணைக்காக
அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் திரும்பி எம்மிடம் வரவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள். எனவே கடத்தப்பட்ட எங்கள் பெற்றோர்களும் கூட உயிருடன் இருக்கிறார்கள்.

இதை நாம் விசுவாசமாக நம்புகிறோம். எல்லா வல்லமையுள்ள கடவுள்களும், எங்கள் ஜெபமும் எங்கள் பெற்றோரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவும் என்று நாம் சொல்லுகிறோம்.

நன்றி

4

5

6

7

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.