தமிழ் புலம்பெயர் செய்திகள் | TAMIL DIASPORA NEWS
மொன்றியல் அருள்மிகு திருமுருகன் ஆலய தேர்த் திருவிழா
மொன்றியல் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா, கல்வியங்காடு மக்களின் பங்களிப்புடன் ஆவணி 22, சனிக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
கனடாவில் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் இந்த ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெறவும், முருகப்பெருமானின் அருளால் அனைவருக்கும் நலன், வளம் மற்றும் மகிழ்ச்சி பெருகவும் Tamil Diaspora News சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ரொறண்டோ – மொன்றியல் சிறப்பு பேருந்து வசதி
இந்த தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் மக்களுக்காக, GPS கலாச்சார ஒன்றியம் – கனடா அனுசரணையில் ரொறண்டோவிலிருந்து மொன்றியலுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவணி 21, வெள்ளிக்கிழமை இரவு – ரொறண்டோவிலிருந்து புறப்பாடு
ஆவணி 22, சனிக்கிழமை – தேர்த் திருவிழாவில் பங்கேற்பு
ஆவணி 22, சனிக்கிழமை மாலை – மொன்றியலிலிருந்து ரொறண்டோ திரும்புதல்
போதுமான எண்ணிக்கையில் ஆசனப் பதிவுகள் கிடைத்தால் மட்டுமே பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். எனவே பயணிக்க விரும்புவோர் ஆவணி 18, செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக தங்களது ஆசனங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
தயா சுப்பிரமணியம் – 416-786-8048
ஜெயக்குமார் நடராஜா – 416-558-2551
வேல்! வேல்! வெற்றி வேல்!
வாழ்த்துகளுடன்,
Tamil Diaspora News | தமிழ் புலம்பெயர் செய்திகள்