காணாமல் போனவர்களை தேடிய உறவுகளில் மீண்டும் ஒரு தாய் மரணம்

Screen Shot 2022-05-04 at 12.49.39 AM Screen Shot 2022-05-04 at 12.56.32 AM

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு (01) மரணமடைந்துள்ளார்.

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த தங்கராசா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவரது மகன்- தங்கராசா தயாபரன் (வயது 41), மருமகன்- தம்பு தியாகராசா (வயது 56), பேரன்- தியாகராசா மனோகரன் (வயது 31) ஆகிய மூவரும்
கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளத்தில் விறகு வெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Tamil Diaspora News.com 631 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்