துறைமுகங்களிற்கு எதிர்ப்பு !

பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் துரதிஸ்டவசமாக சில தமிழ் பிரதிநிதிகள் அதை தடுக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். அதாவது குறித்த சில தமிழ் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்திகளை தடுப்பதையே தமது வழமையான செயலாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

அவ்வாறான ஒரு பொய்த்தனமான  பிரசாரங்களையே குறித்த பருத்தித்துறை, பேசாலை, குருநகர்  துறைமுக  உருவாக்கத்திலும் அவர்களால் செய்யப்பட்டுவரகின்றது. ஆனாலும் அவர்களது தடைகளையும் பொய்யான பிரசாரங்களையும் கண்டுகொள்ளாது மக்களின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்து கொடுப்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்