இந்த தேர்தலில், தமிழர்களாகிய நாம், நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் வாக்கு மொழியை பயன் படுத்த வேண்டும்.
ஒரு சின்ன பாம்பைகூட பெரிய தடியால் அடிக்க வேண்டும்.
தேசியத் தலைவர் பிரபாகரன்: ஒரு சின்ன பாம்பைகூட பெரிய தடியால் அடிக்க வேண்டும்.
குறிப்பாக வரும் இந்த தேர்தலில், தமிழர்களாகிய நாம், நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் வாக்கு மொழியை பயன் படுத்த வேண்டும்.
தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், திருசெல்வம் போன்ற தலைவர்கள் தமிழர்கள் தேசிய கொள்கை மட்டுமே தமிழர்களுக்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பான மற்றும்; பாதுகாக்கப்பட்ட தாயகத்தையும் வெல்லும் என்று முடிவு செய்தனர்.
எங்கள் தலைவர்களின் கொள்கைக்கு எதிரான TNA ஐ நாம் தோற்கடிக்க வேண்டும்.
சுமந்திரன் இந்த தேர்தலில் தோற்றால், அவர் போனஸ் இருக்கை மூலம் எம்.பி. ஆக முடியும். அவர்கள் இரண்டு போனஸ் இடங்களை வென்றால், விருப்பமான பட்டியலில் முதல் இடத்திலிருந்து அம்பிகா சற்குணநாதன் எம்.பி. ஆக முடியும்.
இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தால், தமிழர்களின் பிரதிநிதித்துவம் மேலும் தமிழர்களை பலவீனமாக்கும். எந்த மாற்றங்களும் இல்லாமல் இது வரை உள்ள நிலை தான் நீடிக்கும்.
மேலும் சர்வதேச விசாரணையும் இல்லை, இனபடுகொலைக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலும் இல்லை. அத்துடன் நாம் எல்லோரும் “ஏக்கிய ராஜ்ஜ” வில் தான் இருக்கவேண்டும்.
மற்றைய ஊமையாக இருக்கும் கூட்டமைப்பு எம் பி க்களும், தமது பையை நிரப்பும் தொழிலை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.
நீங்கள் சுமந்திரனையும் அம்பிகாவையும் தமிழர் தாயகத்தில் பார்க்க மாட்டீர்கள். அவர்கள் கொழும்பில் இருப்பார்கள், தமிழர்களுக்கு பல கெடுதலை உண்டு பண்ணுவார்கள்.
அவர்கள் இருவரும் எம்.பி. ஆனார்கள் என்றால், தாம் திருட்டுத்தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் எம்.பி.யாக வந்தது என்று சிந்தித்து, வடகிழக்கில் உள்ள தமிழர்கள் முட்டாள்கள் என்று அவர்கள் கை கொட்டி சிரிப்பார்கள்.
இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் சிங்கள அயலவர்களையும் , சிங்கள நண்பர்களையும், சிங்கள அரசியல்வாதிகளையும் மகிழ்விக்க செயல்படுகிறார்கள்.
எனவே, நாம் கூட்டமைப்பை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு எமது வாக்குகளை இட வேண்டும், இது பாதுகாப்பான பாதுகாக்கப்பட்ட தாயகத்தை சர்வதேச சக்தியின் உதவியுடன் பெறவும் மற்றும் இனப்படுகொலைக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களையும் பெறக்கூடியதா இருக்கவேண்டும்.
நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது வாக்கு மொழியில் “ஒரு சின்ன பாம்பைகூட பெரிய தடியால் அடிக்க வேண்டும்” என்று கூறியது போல, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெருவாரியான வாக்குவித்தியாசத்தால் (Big Margin ) தோற்கடிக்க வேண்டும். அவர்கள் ஒரு எம்.பி. பதவியை கூட வெல்லக்கூடாது.
மாற்றத்திற்கு தமிழர்கள் வாக்களிக்க முடியும் என்பதை இது எதிர்கால அரசியல்வாதிகளுக்கு கற்பிக்கும். சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கீழ் வீட்டு சின்னத்திற்கு எப்போதும் வாக்களிக்க தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இது வலியுறுத்தும் .
இது எதிர்காலத்தில் பொய் கூறி தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை உருவாக்காது.
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
Be the first to comment