News Report: Some countries, including the US, are staging directly; அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.–இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஜனநாயகத்துக்கு அமைவாக ஜனாதிபதி விரைந்து தீர்க்க முன்வர வேண்டும் என வெளிநாடுகள் கடுமையான அழுத்தம் வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. அந்த அழுத்தங்கள் காலப்போக்கில் நேரடி தலையீடாக மாறவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு முன்வருதல் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும், பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்ட விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க உட்பட சில நாடுகள் நேரடியாக களமிறங்க தயாராகிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்