What is Federalism? சமஷ்டி என்றால் என்ன? – Federalism-101 by Tamils for Trump |
|
சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி. சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி பாதுகாக்கப்படும். மாநிலத்தின் இறையாண்மை என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், சொத்துடமைகளும் முழுமையாக மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கருத்தாகும். சமஸ்டி அல்லது கூட்டாச்சி, போரிடும் இனவாத குழுக்களை தனித்தனியாக ஒரு நாட்டில் வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் பிரிவினை தவிர்க்கும் என்பது சமஸ்டியின் தத்துவம். இந்த சமஷ்டி (கூட்டாட்சி)யினால் என்ன நன்மை? குறிப்பு :”தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்த ஆகியவற்லிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழரின் தேவை. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக போராடினார்.” இனவழி அல்லது கலாச்சார பிளவுகளால் பிரிக்கப்பட்டுள்ள மக்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கு மத்தியில் சுவாரஸ்யமான தீர்வுகளாகக் காணும் ஒரு அரசியல் ஒழுங்ககே சமஸ்டி அல்லது கூட்டாச்சி. கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா, ஈராக், நேபாளம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் வைத்துக்கொண்டு சமஸ்டி ஏற்பாடு விரும்பத்தக்க அமைதியான ஒரு விளைவை உண்டு பண்ணியுள்ளது. இந்த சமஷ்டி அமைப்பு நாட்டின் சிக்கல்களில் பலவற்றை தீர்க்க முடியும். ஒவ்வொரு இனமும் தன்னாட்சி கொண்ட ஒரு குறிப்பிட்ட பகுதிக்கில் அல்லது மாநிலத்தில் வாழமுடியும். இவ்விதத்தில் ஒவ்வொரு இனமும் மகிழ்ச்சியாகவு, பயமற்றும் இருக்முடியும். இதனால் , இவ்வினங்கள் விரைவான பொருளாதார, தொழில்துறை, கல்வி போன்ற பலவற்றில் முன்னேற்றம் ஏற்படும். இம்முறையில், உதாரணமாக போஸ்னியாவில் நடந்தது போல், இனஅழிப்பை உண்டு பண்ணிய சேர்பியர்கள், சமாதானத்தை விரும்பி, தமது சொந்த இடங்களுக்கு சென்றது போல், சிங்களவர்களும் வட கிழக்கை விட்டு தமது சிங்கள நாட்டில் உள்ள வீட்டிடங்களுக்கு திரும்பி செல்வார்கள். குறிப்பு: மத்திய அரசாங்கத்தின் பொறுப்புகள் மாநிலங்களால் அல்லது மாகாணங்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. மாநிலங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே, எந்தவொரு சட்டத்தையும் அமுல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. சமஷ்டியின் தத்துவத்தின் படி (கொழும்பில் உள்ள) மத்திய அரசாங்கத்தின் பொறுப்புகள்:
“மத்திய அரசின் பொறுப்புகள்அல்லது அதிகாரங்கள்” மேலே பட்டியலிடப்பட்டுள்ள 6 பொருட்கள் தவிர, மாநில அரசு எல்லா அதிகாரத்தையும் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, தமிழ் சிங்கள இரு மாநிலங்களின் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:
கொடூரமான சிங்கள ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் கீழ் வாழும் எங்கள் அன்பானவர்களுக்கு, ஈழத் தமிழர்கள், புத்தகங்கள் அல்லது செய்தித்தாள் கட்டுரைகள் மூலம் தான் சமஸ்டி பற்றி கற்றுக்கொள்கிறார்கள். சம்பந்தன், சுமந்திரன் மற்றும் பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியல்வாதிகள் கூட சமஸ்டி (கூட்டாட்சி) அரசியலமைப்பை பற்றி முற்றிலும் தெரியாது. ஆனால் அவர்கள் அனைவரும் சமஸ்டி பற்றி பேசுகின்றனர். சமஸ்டிபற்றி தெரியாததிற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் சமஸ்டி நாட்டில் வாழ்ந்ததில்லை. எழுத்துக்கள் மூலம் தான் சமஸ்டி பற்றி தெரியும். கனடா அல்லது அமெரிக்காவிலிருந்து நிபுணரைப் பெற்று சமஸ்டி பற்றி படிப்பது தான் ஒரே வழி. இல்லாவிட்டால், அது சமஸ்டி மறைந்திருப்பதாயும், பெயர் பலகை தேவையில்லை என்பதும், சிங்களத்தில் ஒற்றை ஆட்சி (ஏக்கிய ராஜ்ஜ) என்று எழுதியிருந்தால் கண்களை மூடி சமஸ்டி என்று நினைத்தால் ஒற்றை ஆட்சி சமஸ்டி யாக மாறும் என்பதும், தமிழரை மடையர் என்பது மட்டுமல்லாமல் தாம் புத்தி கூர்மை யானவர்கள் என்று நினைப்பவர்களை தமிழர் தாயகத்திலிருந்து துரத்த வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே ஒரு கவர்னர் இருக்கிற முழு சமஸ்டியும், பெயர் பலகை இல்லாத சமஸ்டியும் உலகில் இல்லை. இந்த ஒற்றை ஆட்சியை(ஏக்கிய ராஜ்ஜ) சமஸ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம். |