“கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை ……”- சுமந்திரன்

0-02-03-27fe1d93202274cb0bc155744357c4e5769721aed86bbdab7c753dc160268ea0 1c6d8f5e8b7003

கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது.” – என சுமந்திரன் சமீபத்தில் கூறியுள்ளார்.

சமீபத்திய (2015) ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், கிழக்கு மாகாண சபையில், ஸ்ரீ.ல.சு.க. யானது சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் மஹிந்த ஸ்ரீ.ல.சு.க. என 2 கட்சிகளாக உடைந்தது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை கட்சியாக ஆக்கியது. மாகாண அரசாங்கத்தை அமைக்கவும், முதலமைச்சரைத் தெரிவு செய்யவும் தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் கிடைத்தது .

ஆனால் சுமந்திரன் சமீபத்தில் கூறினார் “கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது. .”

எனவே, சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோர் கிழக்கு மாகாண தமிழர்கள் ஆளும் மாகாண அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கவில்லை. இருவரும் தமிழ் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கவும் அனுமதிக்கவில்லை.

அதற்கு பதிலாக முஸ்லிம்கள் ஆளும் மாகாண அரசாங்கத்தை அமைக்கவும், முஸ்லிம் முதலமைச்சரைத் தெரிவு செய்யவும் உடந்தையானார்கள்.

சுமந்திரன் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை மீறியுள்ளார் . அவர் கிழக்கு தமிழர்களை ஏமாற்றியுள்ளார் .

சுமந்திரனுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது ?

தமிழர் பலம் எல்லாம் இவரின் சொத்தோ? ஏன் எல்லா வற்றையும் சிதைக்கிறார்?

தமிழ் தாயகத்தில் ஒரு தமிழன் கூட இல்லையா இதை கேட்டு சுமந்திரனை தமிழ் அரசியலிலிருந்து விலக்குவதற்கு?

யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ் மக்களுக்கும் யுத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் பல உதவிகள் தேவையாக இருந்தது. தமிழ் மக்களுக்கு உதவ முடிந்த எல்லாவற்றையும் செய்வதற்கு கிழக்கை கைப்பற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நாங்கள், புலம் பெயர் தமிழர்கள் வேண்டிக்கொண்டோம் .இதனால் கடந்த கிழக்கு மாகாண தேர்தலுக்காக புலம் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பணம் சேர்த்து அனுப்பினார்கள் .

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சில தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாங்கள் தொலை பேசியில் அழைத்தோம். ஸ்ரீ.ல.சு.க. இரண்டு கட்சிகளாக பிளவுற்ற பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி பெரும்பான்மை கட்சியாக இருப்பதால், கிழக்கில் மாகாண அரசாங்கத்தை அமைக்க அவர்களை கேட்டுக் கொண்டோம். இதனை சம்பந்தனுக்கு எடுத்துரைக்க கேட்டுக்கொண்டோம்.

சில தமிழ் எம்.பி க்கள் சம்பந்தனிடம் சொன்னதாயும் அதற்கு சம்பந்தன் தலை ஆட்டியதாயும் புலம் பெயர் மக்களிடம் சொன்னார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ் மக்களுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குமே மிகவும் உதவிகள் உடனடியாக தேவையாக இருந்தது. மேலும் பல தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுருந்து வரவும் இருந்தார்கள். தமிழ் மக்களுக்கு உதவ முடிந்த எல்லாவற்றுடன, கிழக்கு மாகாண அரசையும் கைப்பற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நாங்கள் கூறினோம்.

ஆனால் இந்த சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகிய இரண்டு முட்டாள்களும் முஸ்லிம் மக்களுக்கு தமிழர்களின் அரசியல் சக்தியை (Political Capital) விட்டு கொடுத்தனர் .

கடந்த 4 ஆண்டுகளாக, தமிழர்கள் தங்கள் சில நிலங்களை இழந்து விட்டனர், தமிழரின் பொருளாத அழிவு , தமிழர்களின் மத மாற்றங்கள், கலாச்சார ம் அழிவு மற்றும் இனப்படுகொலை ஆகியன கிழக்கில் தொடர்கிறது.

இந்த துன்பங்களுக்கு சுமந்திரனே காரணம். தமிழர்கள் ஆளும் சக்தியை கொண்டிருந்தால், தமிழர்களுக்கு சிங்கள முஸ்லீம் ஊடக நடை பெரும் அழிவுகளை தடுக்க முடிந்திருக்கும்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கு கிழக்கை தமிழர்கள் ஆளுவது விருப்பம் இல்லை போல்.
இதை கீழ் வருபவை நிரூப்பிக்கும்:

1. 2006 ல் வடக்கு மற்றும் கிழக்கை பிரிக்க அதன் (கங்காரு) நீதி அதிகாரத்தை இலங்கை பயன்படுத்தியது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கு பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமை ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம். இந்த தீர்மானத்திட்க்கு பாராளுமன்றத்தில் 51% வாக்குகள் கொண்ட ஒரு சிறிய பெரும்பான்மை தேவை. “நல்ல ஆட்சி” என்று பெருமையாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக 51 சதவிகிதத்தை பெற்றிருக்க முடியும். ஆனால் ஏனோ தமிழ் தேசியக் கூட்டமை முயற்சி செய்யவில்லை.
2. சம்பந்தனும் மற்றும் சுமந்திரனும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புகளை விரும்பவில்லை. இருவரும் அரசியலமைப்பு கவுன்சில் இருந்தனர். சிங்கள மந்திரிகளின் கருத்துப்படி, இருவரும் வடக்கு மற்றும் கிழக்கிற்கான கூட்டாட்சி தீர்வை ஒன்றிணைக்க விரும்பவில்லை. என கூறியிருந்தனர்.
3. இந்த சிங்கள மந்திரிமார்கள் கூறியதை எதிர்த்து கூறவில்லை என்பது இவர்கள் இருவரும் வடக்கு கிழக்கு இணைவதை விரும்பவில்லை என கருதுகின்றது.

இவற்றினை எல்லாம் பார்க்கும் போது இவர்களுக்கு வாக்கு போட் ட தமிழர்களில் தான் குற்றம் கூறவேண்டும்.
தமிழர் என்ற இனம் இலங்கையில் இருக்க கூடாது என்பது இவர்களின் விருப்பம்.
அல்லது போனால், இவர்களின் DNA (குருதியில் உள்ள தமிழ் மரபியல்) தமிழரின் DNA யாக இருக்க முடியாது.
அல்லது போனால், சிங்கள மாஸ்டர்ருக்கு பணிவாக இருக்க விரும்புபவர்கள்.
அல்லது போனால், விலை போகக்கூடிய விலைமாதர்கள் போலானவர்கள்.

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்