சம்பந்தர் ஐயா இந்த உசார் இவ்வளவு காலமும் எங்க இருந்தது: யாழ் பத்திரிகை வலம்புரி

sampanthanFlag

சிங்கள ஸ்ரீ லங்காவின் தேசியத் தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரவரான திரு. சம்பந்தன் சிங்க கொடியுடன்

Note: எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகப் போகிறது என்ற பயம். தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம் பந்தர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சீறிப்பாய்ந்ததைக் கண்டு தமிழ் மக்கள் அதிர்ந்து போயினர்.

மகிந்த ராஜபக்­ மீண்டும் ஆட்சிக்கு வந் தால், தமிழீழம் மலரும் என்றவாறு இரா.சம் பந்தர் கர்ச்சித்தது கண்டு, அடேங்கப்பா இந்த உசார் இவ்வளவு காலமும் எங்க இருந்தது எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் எழுந்து நின்று எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கர்ச்சித்தது பற்றி நாம் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

இத்தகைய கர்ச்சிப்புக்கள் பாராளுமன்றத் தில் இருக்கும்போதுதான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளியில் வரும்.

ஆகையால் நேற்று முன்தினம் பாராளுமன் றத்தில் இரா.சம்பந்தர் கர்ச்சித்தது பொருத்த மான விடயமே.

ஆனால் நமக்கு ஏற்படும் சந்தேகமெல்லாம் நேற்று முன்தினம் சம்பந்தர் ஐயாவுக்கு ஏற்பட்ட உசாரும் வீறாப்பும் முன்பு ஏற்படாதது ஏன்? என்பதுதான்.

முள்ளிவாய்க்காலில் எங்கள் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது இரா.சம்பந்தர் அவர்கள் பாராளுமன்றத்தில் சீறிப்பாய்ந்து குய்யோ; முறையோ; இது தகுமோ; சர்வ தேசமே எங்களைப் பார், ஐ.நா சபையே தமிழர் களுக்கு ஏன் இப்படித் துரோகம் செய்கிறாய்? எம் தமிழினத்தை அழிப்பது உங்களுக்குத் தெரியவில்லையோ என்று கத்தியிருந்தால்; கதறியிருந்தால் எங்கள் இனம் காப்பாற்றப் பட்டிருக்கும்.

இதை சம்பந்தர் அங்கே செய்யாதது ஏன்? நல்லாட்சி அரசிலாவது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையாவது அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கலாம். அதைக்கூட அவர் செய்யவில்லை.

ஆனால் இப்போது சம்பந்தர் ஐயா இவ் வளவு தூரம் கெம்பி எழுந்தது என்? என்று ஆராய்ந்தால், அதில் ஒன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் வீழ்க்காடும்.

இரண்டாவது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோகப் போகிறது என்ற பயம். தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.
நேற்று முன்தினம் சம்பந்தர் ஐயா கர்ச்சித் ததைப் பார்த்தபோது இந்தப் பழமொழிதான் நமக்கு ஞாபகத்துக்கு வந்தது.

பரவாயில்லை மக்கள் புகட்டிய பாடமும் காலம் காத்திருந்து உபதேசித்த ஞானமும் சேர்ந்து சம்பந்தர் ஐயாவுக்கு தமிழ் மக்களின் அவலம் புரியப்படுத்தப்பட்டால் அதுபோதும்.

எதுவாயினும் எங்கள் தமிழினம் சுயநலங் களிலும் விலைபோதல்களிலும் கந்தறுந்து காவடி எடுப்பதும், கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களை இழந்து போவதும் எம் இனம் செய்த பாவபழியோ என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்