மாவைக்கு தலைமையும் இல்லை, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகும் தகுதியும் இல்லை.

Screen Shot 2021-09-10 at 3.54.39 PM

கடந்த தேர்தல் இரவு சுமந்திரனின் தூண்டுதலால் STF யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் TV முன்னிலையில் மாவையின் மகன் தாக்கப்பட்டார். தனது மகன் தாக்கப்பட தூண்டிய சுமந்திரனுடன், எந்த ஒரு மாணம் உள்ள தந்தை கூட அருகே உட்கார மாட்டான்.

Screen Shot 2021-09-11 at 10.18.44 PM

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தேர்தல் இரவில் சுமந்திரனின் STF மாவை மகனை அடித்ததை இந்த படம் காட்டுகிறது

சிறி சேனாவை ஜனாதிபதி பதவிக்கு ஆதரிக்காததற்காக அனந்தியை கட்சியிலிருந்து நீக்கிய மாவை, ஏன் இந்த போலி சுமந்திரனை பதவி நீக்கம் செய்யவில்லை?

யார் இந்த சுமந்திரன்?

தமிழர்களின் போராட்டத்திற்கு ஒரு அந்நியன், தமிழனாக இருப்பதற்கு வெட்கப்படுபவன், சிங்கள முகவர், தமிழின விரோதி, தமிழ் தேசத்தையம், தமிழ் தேசியத்தையும் அழிப்பவன், தாயகத்திலும் வெளிநாடுகளிலும் தமிழர்களிடையே ஒற்றுமையை அழிப்பவன் , வடக்கு தமிழரின் மாகாண சபையை குழப்ப சதி செய்தவன்.

வவுனியா நெடுங்கேணியில் 6000 காணி உறுதிப்பத்திரங்களை சிங்களவருக்கு வழங்கியவன் , புத்த மதத்தை முதன்மையான மதமாக வலியுறுத்தியவன் , தமிழர் தாயகத்தில் 1000 புத்த அடையாளங்களை உருவாக்க ஆதரவு அளித்தவன்.

சர்வதேச நீதி மற்றும் தமிழர்களுக்கான பொறுப்பை கூறலை அழித்தவன், கிழக்கு மாகாணத்தை சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு சரணடைய விரும்புபவன்,

தமிழ் தொடர்பான அனைத்து சட்ட விஷயங்களையும் கட்டுப்படுத்தி இறுதியில் அவற்றை திரும்பப் பெற அல்லது இழக்க முயலும் ஒருவன் , விடுதலைப் போராட்டத்தை வெறுப்பவர், வடக்கு கிழக்கு இணைவை விரும்பாத ஒருவர் , ஒற்றையாட்சி அரசை விரும்பும் ஒரு நபர்.

தனது STF பாதுகாப்பின் பெயரால், அவர் 25 தமிழர்களை சிறையில் போட்டவர், அவர்களின் 250 குடும்பங்களை இராணுவ அச்சுறுத்தலுடன் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுத்தக்கூடியதாக ஆக்கியவர் .

ரணிலின் அரசாங்கத்தின் முடிவில் ராஜினாமா செய்வதாக உறுதியளித்தார், 17,000 குறைந்த வாக்குகள் பெற்று தேர்தலை திருடியவர்.

அவரது போலி அவதூறு அல்லது மாண நஷ்ட வழக்கு மூலம் ஊடகங்கள் மற்றும் அரசியலில் தமிழர்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல் செய்து தனது நன்மைக்காக ஜனநாயகத்தை முடக்கியாவர். மொத்தத்தில் ஒரு பெரிய பொய்யர்.

அவர் சர்வதேச குற்றவியல் சட்டம், மனித உரிமைச் சட்டங்கள், இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு, ஐநா சட்டம் ஆகியவற்றைறில் அறிவற்ற வழக்கறிஞர். தொழில் ரீதியாக அவர் வணிகச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் என்று தான் அவரது சுயவிவரம் கூறுகிறது. ஆனால் அவருக்கு சட்டம் தெரியாத இடத்தில் அவர் எப்போதும் தான் ஒரு வழக்கறிஞராக கூறி, எல்லாவற்றையும் மழுப்பி கொள்வார் .

தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக மாவை அதிகாரத்தைப் பயன்படுத்தத் பல தடவைகள் தவறிவிட்டார்.

எந்த விதத்தில் மாவைக்கு திறமை அல்லது ஆளுமை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.

திரு சுமந்திரனுக்கு எதிராக, கட்சித் தலைவர் மாவை ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க பல தடைவைகள் இருந்தது. இறுதியில் சுமந்திரனை மீண்டும் கொழும்புக்கு தூக்கி எறிந்திருக்க சந்தர்ப்பவும் இருந்தது. தனது சுய நலத்திற்காக மாவை அமைதியானார்?

கடந்த வாரம், கட்சி அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுமந்திரன், மாவை மற்றும் சிவஞானம் ஆகியோருடன் சேர்ந்து, சுமந்திரன் தன்னை ஒரு ஜோக்கராகவும் பொய்யராகவும் காட்டி கொண்டார்.

சுமந்திரன் பல முறை பொய் சொல்லி தன்னை தானே முரண்படுத்தினார். அவைகளில் சில UNHRC கடிதம், தமிழ் புலிகளை போர்க்குற்றவாளிகள் என்று அழைப்பது, சர்வதேச விசாரணை மற்றும் இறுதியாக ஒற்றுமை.

மாவைக்கு தமிழ் மனமும் உணர்வும் இருந்தால், அவர் கடந்த வார பத்திரிக்கையாளர் சந்திப்பில் கட்சியை விட்டு வெளியேறுமாறு சுமந்திரனை கேட்டிருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது மகன் சுமந்திரனின் STF தேர்தல் இரவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் TV முன்னிலையில் தாக்கப்பட்டார், ஏனெனில் அவரது மகன் சுமந்திரன் வெற்றி பொய்யானது என சவால் செய்தார்.

தனது மகன் கூட தாக்கப்பட தூண்டிய சுமந்திரனுடன், ஒரு அடி வாங்கிய தந்தையாக பக்கத்தில் இருப்பது கூட ஒரு மாணம் கெட்ட செயல்.

தேர்தலுக்குப் பிறகு சுமந்திரன் மாவையின் தலைமைப் பாத்திரத்தை அச்சுறுத்தினார், மேலும் சிறிதரனை கட்சியின் தலைவராக ஆக்க திட்டமிட்டார்.

வட மாகாண சபையின் முதலமைச்சராக வேண்டும் என்ற மாவையின் கனவவை, புலம்பெயர் மற்றும் தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்கள் அவருடைய கனவுவை கனல் நீராப்பதை உறுதி செய்வார்கள்.

மாவை முதலமைச்சரானால், பணத்துக்கும் அதிகாரத்துக்கும் தமிழர்களை விற்றுவிடுவார். 2009 இலிருந்து எம்மை விற்றது போதும்.

மாவை சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்க முடியாதது ஏனெனில் மாவை புரோக்கர் சுமந்திரன் மூலம் சிங்களவரிடமிருந்து பல தடவை பெரும் பண தொகையைப் பெறுபவர். இதனை எம்மால் நிரூபிக்க முடியும். இவை யாவும், தமிழர்களை பழிவாங்க, சுமந்திரன் செய்யும் செயல்கள்.

இந்த பாதிக்கப்பட்ட தமிழர்களை மாவையும் சுமந்திரனும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்துவதை , கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.

தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கு நல்லது செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது, ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கு தீங்கு (துரோகம்) விளைவிப்போம் என்று ஒருபோதும் சொல்லவில்லை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு.

About Tamil Diaspora News.com 302 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்