தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபனின் தாயார் மறைவு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபனின் தாயார் திருமதி.நடராஜா சறோஜினிதேவி இன்று செவ்வாய்க்கிழமை(16.11.2021) அதிகாலை-05 மணியளவில் யாழில் காலமானார்.

யாழ்.மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்மையாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல்-04 மணியளவில் தெல்லிப்பழை பன்னாலையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காகப் பூதவுடல் கீரிமலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Tamil Diaspora News.com 340 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்