தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.சிறிதரன் எம்.பி., டெலோ தமிழர்களை முட்டாளாக்க ஒரு நாடகம் செய்து ரணிலை பிரதம மந்திரியாக்கினார்கள் . ரணில் மூலம் தமிழர்க்கு தேவையான 5 விடயங்களை பெறுவதற்காக டெலோ சம்பந்தனுக்கு, ரணிலின்பிரதமர் பதவிக்கு நிபந்தனையிட்டார்கள் . சிறிதரன் சம்பந்தன் பணம் வாங்கி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாய் குறை கூறி தான் ரணிலுக்கு ஆதரவு தர மாட்டார் என்று கூக்குரலிடடார். ரணிலிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் (அல்லது சமரசமும்) இல்லாமல் டெலோவும் சிறிதரனும் ரணிலுக்கு ஆதரவளித்தார்கள் . இவர்களிருவரும் தமிழர்களுக்கு செய்ததை சொல்லுவது “ஆசை காட்டி மோசம் செய்வது” என்று. இந்த இருவரும் ஒரு நல்ல நாடகத்தை நடத்தி தமிழர்களை முட்டாளாக்கினர். இது தமிழர்களின் தவறுகள். ஒன்று, இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது பிழை , இரண்டாவது, இவர்கள் தமிழர்கள் நலன் பாராது தமது நலன்களை பார்க்கும்போது தமிழர்கள் இவர்களை எச்சரிக்கை செய்யாது உமைகளானது. சரித்திரம் சமகாலத்தில் வாழும் தமிழர்களை தான் குறை கூறும், இந்த சுயநலமிக்க எம்.பி.க்களை அல்ல. |
Be the first to comment