|
போஸ்னியன் பாணி கூட்டாட்சி அறிமுகப்படுத்தப்படவில்லை என்றால், தமிழர்கள் தமிழீழம்தொடர்பான கோரிக்கையை திரும்பப் பெறுவார்கள் என்பது யதார்த்தம். NEW YORK, NEW YORK, USA, August 6, 2018 /EINPresswire.com/ — தமிழர்கள் ஸ்ரீலங்காவின் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும், இல்லையென்றால்அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவை தங்கள் நெம்புகோலை இழந்துவிடும். புதிய அரசியலமைப்பில் என்ன இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. ஆனால் டாக்டர் ஜெயம்பதியின் கூற்றின்படி, இலங்கையில் ஒற்றை ஆட்சி தான் புதிய அரசியல் அமைப்பில் இருப்பதும், மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பில் ஒரு அதிகாரமும் இல்லை என்பதும் வட கிழக்கு இணைப்பு இல்லை என்பதும் உறுதி செய்துள்ளார். எனவே, தமிழர்கள் ஒற்றை ஆட்சியை நிராகரிக்க வேண்டும். ஒற்றை ஆட்சியில் 2/3 அதிகாரங்கள் சிங்களவர்களுக்கு உரியது. எனவே அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்யமுடியும். தமிழ் கிராமங்கள் மற்றும் அவர்களது நிலங்களைக் கைப்பற்றுவது, சிங்களகுடியேற்றங்கள், தமிழீழத்தில் இராணுவத்தை வைத்திருப்பது, சிங்கள பொலிஸ் மற்றும்இராணுவத்தினரால் அச்சுறுத்தல் மூலம் தமிழர்களை அடிமையாக வைத்து கொள்வது, மற்றும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள் ஆகியவற்றை மேற்கொள்ளல். தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க கூடிய அரசியல் அமைப்பு கூட்டாட்சி (சம்ஷடி) அரசியலமைப்பு அல்லது தனி நாடு மட்டுமே. போஸ்னியா பாணி கூட்டாட்சிவாதம், சிங்களம் மற்றும் தமிழர்களுக்கு சம அந்தஸ்தை கொடுக்கும் . போஸ்னிய பாணியில் கூட்டாட்சிவாதத்தை ஸ்ரீலங்கா நிராகரிக்கிறார்கள் என்றால். தமிழர்கள் தமிழீழத்திற்கான கோரிக்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அதாவது ஸ்ரீலங்காவில் இருந்து வட, கிழக்கு பிரிவினையை உண்டுபண்ண முயற்சிகளை செய்யவேண்டும். குறிப்பு: போஸ்னிய பாணி கூட்டாட்சி என்பது அமெரிக்க மற்றும் பிற சக்திவாய்ந்த நாடுகளின் இனத்துவ யுத்தத்தைத் தவிர்க்க சமீபத்திய அரசியலமைப்பு அங்கீகாரம் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற முக்கிய செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தநாடுகளில் பிரச்சாரம் செய்வதன் மூலம், தமிழீழம் பெற முடியும். இதையே பின்வரும் நாடுகள் பிரச்சாரம் செய்வதன் மூலம் வெற்றி பெற்றார்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பியஒன்றியத்தில் தாங்கள் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து முழுமையான பிரிவு பட பிரச்சாரம்செய்து வெற்றி பெற்றார்கள் : தென் சூடான், கிழக்கு திமோர், கொசோவா, போஸ்னியா … புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதன் மூலம் ஸ்ரீலங்கா பல பெரிய வெற்றிகளை அடைய முடியும்.
நாம் ஒற்றையாட்சி அரசை ஏற்றுக் கொண்டால், அரசியல் தீர்வைப் பற்றி பேச்சுவார்த்தை எதுவும் எதிர்காலத்தில் இருக்காது. சிங்களவர்கள் சொல்வார்கள் இப்போது அரசியல் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று. எனவே, இந்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லுங்கள், தமிழர்கள் எந்த அரசியல் அரசியலமைப்பு மாற்றங்களையும் ஆதரிக்க மாட்டார்கள் என்று. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியவை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்பங்கேற்க வேண்டும். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிங்கள மக்களை நம்புவதில்லை. அரசியலமைப்பு மாற்றங்களில் போஸ்னிய பாணி கூட்டாட்சி என்பது நமக்குத் தேவை. போஸ்னிய பாணி கூட்டாட்சி என்பது அமெரிக்க மற்றும் பிற சக்திவாய்ந்த நாடுகளின் இனத்துவ யுத்தத்தைத் தவிர்க்க சமீபத்திய அரசியலமைப்பு அங்கீகாரம் ஆகும். போஸ்னியன் பாணி கூட்டாட்சி அறிமுகப்படுத்தப்படவில்லை என்றால், தமிழர்கள் தமிழீழம் தொடர்பான கோரிக்கையை திரும்பப் பெறுவார்கள் என்பது யதார்த்தம். Tamil Diaspora News |
Be the first to comment