தமிழரசுக் கட்சி ஜெனீவாவுக்கு செல்லவேண்டாம், நாம் செய்த வேலைகளை குழப்பியடிக்கவேண்டாம் : புலம்பெயர் தமிழர்கள்

UN SUmanthiran

தமிழரசுக் கட்சி ஜெனீவாவுக்கு செல்லவேண்டாம், நாம் செய்த வேலைகளை குழப்பியடிக்கவேண்டாம் : புலம்பெயர் தமிழர்கள்

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜீத் அல் ஹுசைன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அழைத்துச் செல்ல விரும்பி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவை கொண்டு செல்ல ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும்படியும் அவர் கேட்டுள்ளார். இவரின் பேச்சில் பல முறைகளை மறை முகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு கிழமைக்கு முன் ஜெனீவாவுக்கு திரு. சுமந்திரன் திருட்டுத்தனமாக பயணம் செய்தார். மேலும் ஒரு வருட கால நீட்டிப்பினை கொழும்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள நாடுகளை கேட்டு இருந்தார்.

அவர் ஜெனீவா சென்ற போது பிரிட்டிஷ் மற்றும் ஒரு சில நாடுகளுக்கு என்ன சொன்னார் என்று எங்களுக்கு தெரியாது.

கடந்த ஆண்டு முதல் புலம்பெயர்ந்தோர் செய்த நற்காரியங்களை குழப்பாமால் இருப்பதற்கு தமிழரசுக் கட்சி ஜெனீவாவுக்கு செல்லக்கூடாது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளி நாட்டு அமைச்சகம் கடந்த ஒரு வருட காலமாக பல நாடுகள் சென்று வெளிநாட்டு மந்திரிமார்களையும் மற்றும் நாடுகளின் தலைவர்களிடமும் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

பல போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச வழக்கு அனுபவம் கொண்ட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லுனர்கள் உதவியுடன் ஐ.நா. மனித உரிமைகளுக்கான சபையை சர்வதேச நீதிமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று நிபுணர் சாட்சிகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியாயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே தமிழரசுக் கட்சியின் ஜெனீவாவின் கொள்கைக்கு தமிழ் மக்களின் ஆதரவை இழந்த பின்னர், தமிழரசுக் கட்சி ஐ.நா. மனித உரிமை விஷயங்களில் ஈடுபட கூடாது. அது மட்டும்மன்றி புலம்பெயர் தமிழர்கள் செய்த நற்காரியங்களை குழப்ப கூடாது.

“தமிழரசுக் கட்சி ரணிலின் கடிதமொன்றினை ஜெனீவாவுக்கு கொண்டு சென்று ஒரு வருடத்திற்கு சிறிலங்காவிற்கு நீட்டிப்பு வழங்க வேண்டும் என் கேட்கவுள்ளார்கள் என்றும், ஐ.நா. பாதுகாப்புக் சபைற்கு இலங்கை போர்க்குற்றங்களை அனுப்புவதை நிறுத்தவும் என்றும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை எடுத்துக் கொண்டால், இராஜபக்ஷ அதிகாரத்திற்கு வருவார் என்றும், இது நல்லாட்சிமற்றும் நல்லிணக்கத்திகும் நல்லதல்ல என்றும், இந்த கடிதம் ரணிலின் ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், திரு. சுமந்திரன் அதை சற்று மாற்றி தமிழரசுக் கட்சியின் பெயரில் கொடுக்கவுள்ளதாகவும்.” ஒரு சிங்கள செய்தியாளர் சொல்கிறார்.

இது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லது ஏனென்றால் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு பதவியில் இருக்க முடியும்.

தமிழரசுக் கட்சி ரணிலிடம் இருந்து இருந்து வெகுமதிகளை பெற்றுக் கொண்டுதான் ஜெனீவாவுக்கு புறப்படுகிறார்களா என்பது மக்களிடம் ஐயமாக உள்ளது

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.