யாழ்ப்பாணத்தில் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்.

Screen Shot 2022-10-11 at 4.34.32 PM

“போதையை ஒழிப்போம்- நம் பாதையை நாமே வகுப்போம்”

கல்விக்கரம் உதவி மையத்தின் அனுசரனையுடன் 11.10.2022 இன்று திருநெல்வேலி பொதுச்சந்தை யாழ் வஸ்தரிப்பு நிலையம் பகுதியில் போதை பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் யாரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்தாலோ தெரிந்தலோ எங்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

அவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க நாம் தயராக உள்ளோம்.!

எமது சந்ததியின் இருப்பிலே எமது வரலாறுகள் புனிதப்படும். திட்டமிட்டு திணிக்கப்படும் இந்த போதை அரக்கனை துரத்தி எமது தேசத்தின் தலைமுறையை காப்பாற்றுவது நம் ஒருவரின் தலையாய கடமை என்பதை மறவாதீர்கள்..?

வீட்டுக்குள் நுளைந்த பின் தடுத்து பயனில்லை..!

உயரிய வரலாறுகளை கொண்டு உயர்ந்த தேசம் நசிந்து போவதற்கு சிலரின் திட்டமிட்ட சதிக்குள் எம் தலைமுறையை தள்ளபோகிறோமா..!

இது எம் தேச குடிமகன் ஒவ்வொருவரின் அத்தியாவசிய கடமை.!

கொடிய போதை அரக்கனிடம் மாட்டியிருக்கும் எம் பிள்ளைகளை விடுவிக்க முன்வாருங்கள்..!

கல்விக்கரம் உதவி மையம்.
தொடர்புகளுக்கு~T.p 0773206555

“போதையை ஒழிப்போம்- நம் பாதையை நாமே வகுப்போம்”

போதையை ஒழிப்போம்

போதையை ஒழிப்போம்

போதையை ஒழிப்போம்

போதையை ஒழிப்போம்

கல்விக்கரம் உதவி  மையம் போதை ஒழிப்போம் – நம் பாதையை நாமே வகுப்போம்.

அன்பான நம் தமிழ் மக்களே ! போருக்குப் பின்னரான காலத்தில் நமது பிரதேசத்தில் போதைப் பொருட்களின் அதீத வருகையும் போதை வஸ்துப் பானையாளரின் அதிகரிப்பும் நம்மை வேதனைப்படுத்துகின்றது . கல்வி . கலை , கலாச்சார பண்பாட்டு விழுமியங்களின் உச்ச வளர்ச்சி நிலையை அடைந்திருந்த தமிழ் மக்களாகிய நமது வளர்ச்சியின் இன்றைய நிலை என்ன ? கல்வியில் 9 மாகாணங்களில் முதல் நிலையிலிருந்த நம் வடக்கு மாகாணம் இன்று 9 ம் மாகாணமாக கீழிறங்கி விட்டது . கலாச்சாரம் முழுதாக மாறி வாள்வெட்டுக் கலாச்சாரம் , அரைகுறை ஆடைக்கலாச்சாரம் என்றும் மாறி விட்டது . முதியோர்களை பராமரிக்கத் தவறி முதியோர் இல்லங்களை நாடுவதும் , அவர்களை பராமரிக்க தவறுவதும் சிறுவர்கள் கல்வியை இழந்து சிதறிச் சின்னா பின்னமாக வரும்நிலையிலும் நமது பண்பாடே கேள்விக் குறியான நிலையிலுள்ளது . இந்த நிலை வருவதற்கான காரணம் என்ன ?

மக்களே ! தமிழ் மக்களின் ஒட்டு மொத்தமான கல்வி , கலை , கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நிலை குலைய வைப்பதில் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதை பொருளின் வருகை என்பதை நீங்கள் அறியவில்லையா ?

நம்மை நம்மை இளைஞர்களே! யுகதிகளே ! நமது வாழ்கையை சீர் குலைத்து நோயாளியாக்கி குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து மரணத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு இந்த போதை பொருட்களை இன்றே தகர்த்தெறிவோம்! நம் தமிழ் இனத்தின் அடையாளங்களுடன் வாழ்கையை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம் !

“சிந்தியுங்கள் செயற்படுத்துங்கள் ”

போதையின் வருகையைத் தடுத்து இளம் சந்ததியினரின் வாழ்கையை அழகுபடுத்த ஒன்றிணைவோம் . “நமக்கான வாழ்வை நாமே வடிவமைப்போம்”

நன்றி

கே.கே.எஸ் வீதி இணுவில் . கல்விக்கரம் உதவி மையம்.

T.p 0773206555

 

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்