Dr. ராமதாஸ்: தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும்

“மாவீரர் நாள்” முன்னிட்டு, டாக்டர் ராமதாஸ் ஒரு செய்தியை ட்வீட் செய்தார்.Screen Shot 2022-11-26 at 7.14.37 PM

உலக அரசியலில் இருந்து இந்தியாவைக் காக்கும் தமிழீழத்தை ஏற்குமாறு புதுடெல்லியை அவர் வலியுறுத்துகிறார். மேலும், வாக்கெடுப்பு மூலம் அதை அடைய முடியும் என்கிறார்.

மோடியின் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு தமிழர்களையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் தலைவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வவுனியாவில் கடந்த 2100 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பது போன்று தமிழகத்திலும் ஓராண்டு போராட்டம் செய்வோம்.

டாக்டர் ராமதாஸின் ட்வீட் இதோ:

இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அது தான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வும் கூட. உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கனவும், தாகமும் கூட தனித்தமிழ் #ஈழம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான்

தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக #தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும்!

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தங்களின் நாட்டை தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதன்படி ஐ.நா. மூலம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்!

Tweet: https://twitter.com/drramadoss

Link to Veerakesari: https://www.virakesari.lk/article/141316

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்