தமிழர்கள் ஏன் ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

Why do the Tamils Need to Vote for a Tamil Presidential Candidate.

2

1

 

தமிழர்கள் ஏன் ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு- வவுனியாவில் தொடர்ச்சியாக 984ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் என்ன முகத்துடன் வாக்கு கேட்டு வருகிறார்கள் ? அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயக தேர்தல் தொடர்பாக தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அதற்கு புள்ளடியிடப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகள் தாங்கியிருந்தமை காண கூடியதாக இருந்தது.

கடத்தப்பட்டும் காணாமல் போன உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையை கீழே காணலாம்:

1. ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வு விருப்பத்தை வெளிப்படுத்த ஐ.நா. உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டுமென வலியுறுத்த.

2. ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சிங்கள போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறல் மற்றும் நீதியை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைக் காண்பிக்கும்.

3. ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பது எக்கிஜா ராஜ்ஜா (ஒற்றையாட்சி) மற்றும் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை நிராகரிக்கும்.

4. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழர்கள் சுய ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கும், அல்லது சிங்கள ஆட்சியை நிராகரிப்பது. இது சிங்கள அரசியலை நிராகரிக்க வேண்டும் என்பதாகும்.

5. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியவாதத்தை, அதாவது “வடகிழக்கு சுய ஆட்சி , தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகளை நிலை நாட்டுவது” இவை யாவையும் விரும்புவர் ஓர் தமிழ் தேசியவாதி.

6. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழ் தாயகத்தில் சிங்கள குடியேற்றத்தை தமிழர்கள் நிராகரிப்பதைக் காண்பிக்கும்.

7. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழ் தாயகத்தில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புகளை தமிழர்கள் நிராகரிப்பதைக் காண்பிக்கும்.

8. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழர்கள், தமிழர் தாயகத்தில் புத்தத்த விகாரைகளை கட்டுவதை நிராகரிப்பதைக் காண்பிக்கும்.

9. தமிழருக்கு வாக்களிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்ளூர் போர்க்குற்ற விசாரணை, வடகிழக்கு இணைப்புக்கு எதிர், எக்கியா ராஜ்ஜா (ஒற்றையாட்சி அரசு), புதிய அரசியலமைப்பு, தமிழரை அடிமை பாதைக்கு கொண்டு செல்வது மற்றும் கூட்டமைப்பின் தமிழ் பிரதிநிதித்துவம் போன்றவற்ரை தமிழர்கள் நிராகரிப்பதைக் காண்பிக்கும்.

10. ஒரு தமிழருக்கு வாக்களிப்பது தமிழர்கள் தங்களின் முடிவில்லாத அரசியல் பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவியை விரும்புகிறது என்பதையும் இனப்படுகொலைகளிலிருந்து நிரந்தர பாதுகாப்பை விரும்புவதையும் காண்பிக்கும் .

ஜனாதிபதி வாக்குப்பதிவில் யார் பெயர் என்பது முக்கியமல்ல, ஒரு தமிழரைத் தேடுங்கள் அவர் தமிழ் தேசியவாதியானால் , அவருக்கு வாக்களியுங்கள்.

நீங்கள் அவரை விரும்புகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல; ஆனால் அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்பதே முக்கியம்.

அவர் பல முறை ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிட்டாலும் பரவாயில்லை; அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்றால் வாக்களியுங்கள்

அவர் கூட, ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாகக் கூறினாலும் பரவாயில்லை. இந்த தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கவும். இது எங்கள் குறியீட்டு வாக்கு, அவர் எங்களால் விரும்பிய தமிழ் நபராக இல்லாமல் இருக்கலாம்;

இந்த வேட்பாளர் பெயர் சிவாஜிலிங்கம் என்றாலும் பரவாயில்லை; அவர் ஒரு தமிழ் தேசியவாதி என்றால் அவருக்கு வாக்களியுங்கள்.

சிவாஜிலிங்கம் என்பவர் ஏன் ஒரு தமிழ் தேசியவாதியா ? ஆம் ஏனெனில், அவர் முன்மொழியப்பட்ட மூன்று முக்கியமான வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள யு.என்.எச்.ஆர்.சி. க்கு கொண்டு சென்றார். இவை யு.என்.எச்.ஆர்.சி யில் இனப்படுகொலை குறித்து ஆராய வேண்டும் எனவும் , யு.என்.எச்.ஆர்.சி யிடம் போர்க்குற்றத்தை ஐ.சி.சி கொண்டு செல்லவும் மற்றும் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க சர்வசன வாக்கெடுப்புக்கு பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டவ ர்.

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம், தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு .

தமிழ் வேட்பாளரின் தேர்தல் சின்னம் தேடி, மீனுக்கு அடுத்த பெட்டியில் ஒரு ‘புள்ளடி’ போடவும்.

Screen Shot 2019-10-29 at 10.53.53 PM

34

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.