இலங்கையில் தொடர்ச்சியாக மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிப்பட்ட பாகுபாடு – அமெரிக்கா

What is the presidential secretariat for a province? Doubt is raised for the US ambassador.
Systematic discrimination against religious minorities in Sri Lanka: Mike Pompeo

Link: https://www.virakesari.lk/article/84041

Link: https://www.virakesari.lk/article/83857

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு ? அமெரிக்கத் தூதுவருக்கு எழுந்துள்ள சந்தேகம்

1

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு, மக்கள் எழுப்புகின்ற சந்தேகங்கள் தனக்கும் இருப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் விடயங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி மக்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பன்முகத்தன்மை அற்றதாகவும் தெரிகின்றது.

ஏன் இவ்வாறு ஒரு பகுதிக்கு மட்டும் தொல்பொருள் செயலணி நியமிக்கப்பட வேண்டும். உன்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது.

ஜனநாயகத்திற்கு எப்போதும் சிவில் நிர்வாகமே முக்கியத்துவமிக்கதாக அமையும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையானது 30-1 ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகினாலும் மனித உரிமை மீறலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறல் மூலம் நீதியை நிலைநாட்டுவதில் தனது கடமையை நிறைவேற்றும் உன்று நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கைக்கு வந்த தூதரகப் பணியாளர் தொடர்பான தவறான தகவல், தூதரகத்துக்கு அருகில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் மீதான பொலிஸ் நடவடிக்கை என்பன, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தூதரகப் பணியாளர் தொடர்பாக ஊடகத்தில் வெளியான சில அறிக்கைகள் தவறாக முன்னெடுக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், குறித்த பணியாளர் வருவதற்கு முன்னர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்ட நடைமுறையை, தூதரகம் பின்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே நடைபெறவிருந்த அண்மைய ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்யுமாறு, அமெரிக்கத் தூதரகம் கோரவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் விரைவில் இணக்கத்திற்கு வர முயற்சிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தொடர்ச்சியாக மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிப்பட்ட பாகுபாடு – அமெரிக்கா

Screen Shot 2020-06-16 at 1.03.03 AMஇலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிப்பட்ட பாகுபாடு காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் மீதான திட்டமிடப்பட்ட பாகுபாட்டைக் காண்பிப்பதாக சிறுபான்மையின மதக்குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் மீது மதரீதியாக முடுக்கிவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் அரச அதிகாரிகளோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களோ பெருமளவில் அல்லது ழுமுமையாகவே அக்கறை காண்பிக்கவில்லை.

சிறுபான்மையினத்தவர் மற்றும் அவர்களது மதவழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு மேற்படி இருதரப்புக்களும் முயலவில்லை என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.