Link:
1.https://www.ibctamil.com/srilanka/80/137705
2. https://www.tamilwin.com/community/01/239423
Visit Us at:www.tamildiasporanews.com
வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டதையடுத்து ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை இன அழிப்பே, தமிழ் தேசியவாதம் மற்றும் நிரந்தர பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தினை நம்பும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் சுமந்திரனையும் அவரது செவிட்டு ஊமை எம்பிக்களையும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும் என்ற பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Be the first to comment