வவுனியா ராஜ்குமார் தனது சமூக சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ராஜ்குமார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து உதவி கேட்டு வருகிறார். ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சுழற்சி முறை உண்ணாவிரத முறையை அவர் வவுனியாவில் ஏற்பாடு செய்து 3 வருடத்திற்கு மேலாக தொடர்கிறார்கள் .

சிங்கள ஒடுக்குமுறை மற்றும் சிங்கள கொலைகளிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஒரு அரசியல் தீர்வைக் காண உதவவும், தமிழர்களுக்கு நிரந்தரமாக பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு பகுதியை வழங்கவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை ராஜ்குமார் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார் .

இப்போது வடகிழக்கில் ஊரடங்கு உத்தரவின் போதும் , ​​பட்டினி கிடக்கும் வலிந்து காணாமல் போன பெற்றோருக்கு உணவு வழங்கும் பணியிலும் ராஜ்குமார் ஈடுபட்டு வருகிறார் . ராஜ்குமார் தமிழ் புலம்பெயர்ந்தோரிடமிருந்து இந்த உணவு பொருளை பெறுகிறார்.

இந்த கடினமான காலங்களில் புலம் பெயர் மக்கள் அனைவரும் இந்த பெற்றோருக்கு தொடர்ந்து உதவுகிறார்கள். இதற்காக  தமிழ் புலம்பெயர்ந்தோரின் உதவிக்கு நன்றி.

நன்றி,
புலம்பெயர் தமிழரின் செய்திகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.